இந்தி நல்ல மொழி என்றும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தி அலுவல் மொழியாக கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் இந்திக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.


பாலிவுட் படங்களைவிட தென்னிந்திய படங்கள் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதால், பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களை உச்ச நடிகர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். சமீபத்தில், பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன், கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகியோருக்கு இடையே டுவிட்டரில் நடந்த வார்த்தை போரையே உதாரணமாக கூறலாம்.




இரண்டு தினங்களுக்கு முன்பு டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாலிவுட்டால் தனக்கு நேர்ந்த மனதுயரத்தை விழா மேடையில் பகிர்ந்துக்கொண்டார். உச்ச நடிகர் ஒருவர் இந்திப் படத்துறையினர், மற்ற மொழி படத்துறையினர் எந்தளவிற்கு மதிக்கிறார்கள் என்பது கூறியது இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ளது.


இன்று கூட பிரபல இந்தி பாடகர் சோனு நிகம், “தமிழ்தான் உலகின் மிகவும் பழமையான மொழி. இந்தி தேசிய மொழி என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்குமே கூறப்படவில்லை. எந்த மொழியை பேச வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே இருக்கிறது” என்று கூறினார்.


இந்த நிலையில், நடிகையும், இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி நிகழ்ச்சி ஒன்றில் இந்தி மொழி குறித்து பேசியுள்ளார். “இந்தி ஒரு நல்ல மொழி. அதனை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அதேபோல தமிழர்களும் நல்லவர்கள். எவ்வளவு மொழிகள் தெரிகிறதோ அவ்வளவு சந்தோஷம்” என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண