திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள குமரேசன் என்பவரின் விளைநிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி என உள்ளிட்ட 23 நபர்கள் விவசாய கூலித்தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் விவசாய நிலத்தில் வேலைபுரிந்து வந்த வேலையாட்களுக்கு நிலத்தின் உரிமையாளர் குமரேசன் ஃப்ரூட் மிக்ஸர் குளிர்பானத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நிலத்தில் வேலைபுரிந்த ஆட்கள் வீடு சென்றுள்ளனர். நேற்று இரவு நேரத்தில் குளிர்பானங்கள் குடித்த ஒருசிலருக்கு மட்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மலையாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதன்பிறகு இன்று காலை முதல் குமரேசன் நிலத்தில் வேலை புரிந்த நபர்களுக்கு வாந்தி மயக்கம் தலைச்சுற்றல் போன்றவை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக வந்து தலைசுற்றல் ,மயக்கம் மற்றும் வயிற்று போக்கு உள்ளிட்டவற்றை மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு வந்த 18 பேரும் குறிப்பிட்ட குளிர்பானத்தை குடித்ததாக கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 நபர்கள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குளிர்பான கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானம் குடித்த விவசாய கூலி தொழிலாளிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Madurai Adinam ’எனக்கு ரொம்ப வருத்தம்; என்னை வேண்டுமானால் சுடட்டும்’ - கொந்தளித்த மதுரை ஆதினம்!