சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபர் ஸ்ரீநிதி. இவர் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவர் தனது தோழியும், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் தொடரில் நடிக்கும் சின்னத்திரை பிரபலம் நக்‌ஷத்திரா நிலை பற்றி பேசியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியதாவது, “அவ நிறைய தப்பு பண்ணியிருக்கா. ஆனாலும், அவ தப்பான பொண்ணு கிடையாது. அவ தப்பான பொண்ணா இருந்திருந்தா ரெண்டரை வருஷம் என் வீட்ல வச்சுருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கா. அவளைப் பார்க்கும்போது என்னை பாத்த மாதிரியே இருக்கும். அவளுக்கு கல்யாணம், குழந்தைனு செட்டில் ஆகணும்னுதான் ஆசை. பெரிய நடிகையாகனும்னு எல்லாம் ஆசை கிடையாது.




அவ ஒருத்தரை விரும்புனா. நான்தான் அவர் ரொம்ப நல்லவர்ரா இருக்காருனு சொன்னேன். ரெண்டு பேரும் பேசி ஒரு மாசத்துலயே கல்யாணம் வரைக்கும் முடிவு பண்ணிட்டாங்க. எங்க யாருக்குமே தெரியாம அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போதுனு கூட எங்களுக்கு தெரியாது. சும்மா வீட்டுக்கு கூப்பிட்டு நிச்சயம் பண்ணிட்டாங்க.. நக்ஷத்திராவோட தங்கச்சியை கூப்பிட்ருக்கலாமேனு சொன்னதுக்கு அந்த பையனோட அம்மா அடிக்க வந்துட்டாங்க.. என் வாழ்க்கையில நான் ரொம்ப அழுத நாள் அது. அந்த பையனோட பேமிலியே டிராமா பண்ணாங்க..


நக்‌ஷத்திரா பசிச்சா கூட வாயைத் தொறந்து கேட்கமாட்டா.. அவளை அந்த பையனோட குடும்பமே லாக் பண்ணிட்டாங்க. என் பிரெண்டோட வாழ்க்கையை என்னால காப்பாத்த முடியலைனு என்னால ஷூட்டிங்கூட போக முடில.. அவ போன்ல என்னை ப்ளாக் பண்ணி வச்சுருக்காங்க.. அவளுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் சம்பளம்.. ஆனா, அவ அக்கவுண்ட்ல 10 ஆயிரம் கூட இல்ல. இப்பவே இப்படினா கல்யாணத்துக்கு அப்புறம் அவ எப்படி சந்தோஷமா இருப்பா..? நான் சொல்றது எல்லாம் சீரியல்ல இருக்கவங்ளுக்கு தெரியும்… நான் கஞ்சா, போதையில எதுவும் பேசல..




விஜே சித்ரா இறந்ததுல இருந்து என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் பாதுகாப்பான ரிலேஷன்ஷிப்புல இருக்கனும்னு நினைச்சேன். நக்‌ஷத்திராவை வீட்டுக்கு கூப்பிட்டு பேசினேன். அவ என்னை நம்பல. அவளை அவங்க அம்மாகூட சேத்து வச்சுட்டா போதும்.. இன்னும் அவங்க அவளை விடலன்னா நான் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்.. நக்‌ஷூக்கு ஏதாவது ஆச்சுனா அவ சாவுக்கு கூட நான் போக மாட்டேன்.”


இவ்வாறு அவர் பேசியுள்ளார். அவரது வீடியோவால் இப்போது சின்னத்திரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண