கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ’மகாநதி’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.


இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.






படப்பிடிப்பில் காயம்?


இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் காயமடைந்ததாக முன்னதாகத் தகவல்கள் பரவின.


ஆனால், படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ள நடிகை சமந்தா, தன் ஜிம்மில் ஒர்க் அவு செய்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 


சமந்தா பேக் டூ ஹோம்!


அதில், காலையில் சீக்கிரம் விழித்துள்ளேன், என் நாய்க்குட்டியை மிகவும் விரும்புகிறேன். இவ்வளவு நாளாய் இதனையெல்லாம் மிஸ் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.






தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தீவிரமாக சமந்தா நடித்து வரும் நிலையில், யசோதா, சாகுந்தலம் என அவரது படங்கள் வரிசையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.