பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என கவர்ச்சி நடிகை சோனா தெரிவித்துள்ளார்.


திரை வாழ்க்கை


நடிகை சோனா, அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார்.


பல கவர்ச்சி வேடங்களில் நடித்து இளைஞர்களை தன் வசப்படுத்திய பெருமை சோனாவுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் காமெடி ரோல்களிலும் நகைச்சுவை நாயகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அந்த வரிசையில் வைகைபுயல் வடிவேலுவுடன் ஏகப்பட்ட படத்தில் நடித்திருந்தார். கடைசியாக குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.


தயாரிப்பாளர் சோனா


இதனிடையே நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சோனா திடீரென கனிமொழி என்ற சிறிய பட்ஜெட் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவ்வளவாக ஓடவில்லை. இதையடுத்து படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்.


பட வாய்ப்புகள் குறையவே சில சீரியல்களில் எதிர்முனை கதாப்பாத்திரங்களிலும் சோனா தலையை காட்டினார்.


ஸ்மோக் வெப் சீரீஸ்


இந்நிலையில் தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் சீரீஸில் நடித்து இயக்கியுள்ளார். இதன் மூலம் சோனா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.


இந்த வெப் சீரீஸின் புரோமோஷன் பணிகளில் சோனா ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு பேட்டிகளையும் அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் அளித்த பேட்டியின்போது வடிவேலு சார் கூட நிறைய படங்கள் நடித்துள்ளீர்கள். அவர்களை பற்றி சொல்லுங்க என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.



வடிவேலு பற்றி சோனா


இதைக் கேட்டதும் கடுப்பான சோனா “வடிவேலு பற்றி பேசும் அளவுக்கு அவர் அவ்வளவு வொர்த் கிடையாது. நான் அவர் கூட எந்த படத்திலும் இனிமேல் நடிக்க விரும்பவில்லை. வடிவேல் சார் பத்தி வேற யார்கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுப்பாருங்க. கழுவி கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். குசேலன் படத்திற்கு பிறகு எனக்கு வடிவேல் சார் கூட 16 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எதற்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.


எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுவுடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம். பிச்சை கூட எடுப்பேன். அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.