விழுப்புரம்: தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக முதல்வர் கர்நாடக முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் தமிழக அரசு அழைத்திருப்பது கண்டிக்கதக்கது. இது டெல்டா விவசாய மக்களுக்கு செய்யும் துரோகமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,
தமிழகத்தில் நான்கு நிதிநிலை அறிக்கைகளில் வெளியிடப்பட்ட திட்டங்களில் செயல்படுத்தப்பட்டவைகள் எவை என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் திமுக அரசு 4 நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அவற்றில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில் அவை அறிவிப்புகளாகவே உள்ளதாகவும், கல்வி வேளாண்மை, தமிழ்வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவிக்கபட்ட அறிவிப்புகள் பல அப்படியே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படவில்லை, புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை, அரசு கல்லூரிகளுக்கு 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் நியமிக்கவில்லை, திமுக அரசு அறிவிப்புகளை வெளியிடும் அரசாகவே உள்ளதாகவும், திமுக அரசு ஆட்சிக்கு வருமுன் 505 வாக்குறுதிகளை அளித்தது அவற்றில் 10 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல் அடைந்த அரசாக உள்ளது. சட்டப்பேரவையில் அறிவிக்கபட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்த அரசாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். அரசின் கடன் அறிவிப்புகளை வெளியிடுவது மட்டும் அல்ல எத்தனை திட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளன அவை என்னென்ன மீதமுள்ள திட்டங்கள் எப்போது வெளியிடப்படும் நிறைவேற்றாததற்கு காரணம் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும், அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் நெல்கொள்முதல் விலை 3500 ரூபாயக உயர்த்தி வழங்க வேண்டுமென உழவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் அதனை கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஒரிசாவில் 3500 சத்தீஸ்கர் 3100 வழங்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் குறைந்த அளவே கொடுப்பதால் ஊக்கதொகையை ஆயிரம் ரூபாய உயர்த்தி வழங்க வேளாண் நிதி நிலை அறிக்கையில் வெளியிட வேண்டும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் தமிழக அரசு அழைத்திருப்பது கண்டிக்கதக்கது. மேகதாதுவில் அனைகட்டியே தீருவோம் என தெரிவித்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது டெல்டா பாசன விபசாயிகளுக்கு ஸ்டாலின் துரோகம் செய்வதாக கூறினார்.
புதுச்சேரியில் தாக்கல் செய்யபட்ட நிதி நிலை அறிக்கையில் மகளிர் உதவி தொகை 1500 லிருந்து 2500 ஆக உயர்த்தப்பட்டுமென அறிவிக்கபட்டுள்ளது வரவேற்க தக்கது என்றும் தமிழகத்தில் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில் 1 கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது,அனைவருக்கும் வழங்கப்படுமென கூறிவிட்டு ஆனால் ஒரு கோடி பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையினை 2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
காற்றாலை மின் உற்பத்தியில் 5 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் என திட்டம் அறிவித்து செயல்படுத்தவில்லை என்றும் மின் உற்பத்தியை பெருக்க ஆர்வம் காட்டாமல் தனியாரிடமிருந்து மின்சார கொள்முதல் தமிழக அரசு செய்வதாக தெரிவித்தார்.
நியாய விலைக்கடைகளில் ராகு வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டுக்கு ஆயிரம் டன் ராகி கூட கொள்முதல் செய்ய முடியவில்லை குடும்ப அட்டைதாரருக்கு ராகி வழங்கும் திட்டம் முக்கியமான திட்டம் ராகி கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 5 ஆயிரம் உயர்த்தவும் ராகியை உழவர்களிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்ய அரசு முன்வரவேண்டும் ராகி சாப்பிடுவதால் மற்ற தானியங்களை விட அதிக சத்துக்கள் உள்ளது, திண்டுக்கல் அருகே சுங்கசாவடியை மக்கள் அடித்து நொறுக்கியது தொடர்பாக பாமக நிறுவனர் அந்த மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மக்கள் முன்னெழுச்சியாக சுங்கசாவடியை உடைத்ததாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என ஒன்றிய கல்வி அமைச்சர் பேசிய தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர் ராமதாஸ்:
தமிழர்களின் நாகரிகத்தையும், தொன்மை கால, ஆதிகால நாகரிகத்தையும், சிறந்து விளங்கியதை எல்லாம் அவருக்கு புத்தகமாக கொடுக்க வேண்டும். அதனை படித்த பிறகு நான் சொல்வதை தவறுதான் என ஒப்புக்கொள்ள வேண்டும். மன்னிப்பு கேட்டு விட்டால் அதனை விட்டு விட வேண்டும்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பான கேள்விக்கு:
கோரிக்கை வைக்கலாம் என்றும், யாருக்கு கோரிக்கை வைப்பீர்கள் என்ற கேள்விக்கு., அது ரகசியம் என்றும் ஆனால் திமுகவிடம் கோரிக்கை வைக்க மாட்டோம் என தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சியுடன் குறைந்தபட்ச செயல் திட்டம் என ஏதேனும் பாமக கோரிக்கை வைக்குமா இந்த கேள்விக்கு:
கட்சியின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர் அது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.