புன்னகை இளவரசி என்ற பட்டம் கொண்ட நடிகை சினேகா சமீபத்தில் அவரது மகன் விஹானின் 7வது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது மகனைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.


அதில் சினேகா “எங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் விஹான் பிறந்தார். இத்தனை ஆண்டுகளில் விஹான் எங்களை அத்தனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தலைப்பிள்ளை பெண் பிள்ளையாக இல்லையே என்ற வருத்தமே எங்களுக்கு இப்போது இல்லை” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.






அழகான குடும்பம்:


நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா நட்சத்திர தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் மகன் விஹான் 7வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்த நாள் கொண்டாட்டமான நாளில் நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன்  நீச்சல் குளத்தில் சந்தோஷமாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது திரை ரசிகர்கள் மத்தியில் வைரலானது. 






மேலும் சினேகா தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லம். என் லட்டு, இந்த 7 ஆண்டுகளாக நீ எங்கள் வாழ்க்கையில் அன்பையும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுத்துள்ளாய். இது போன்ற குழந்தைக்காக  தான் அனைத்து பெற்றோரும் கனவு காண்பார்கள். நீ எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். உன் மீது எனக்கிருக்கும் அன்பை வார்த்தைகளால் கூற முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஹான் தங்கம்!" என்று பதிவிட்டு மகனைக் கொண்டாடி இருந்தார்.