நாள்: 11.09.2022


நல்ல நேரம் :


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை









காலை 10.45 மணி காலை முதல் 11.45 மணி வரை


மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை


குளிகை :


மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள் ஆகும். பரிசுகள், அன்பளிப்புகள் பிடித்தவர்களிடம் இருந்து கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதியவர்களின் சந்திப்பு நிகழலாம். அன்பு அதிகரிக்கும்.  


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கவலைகள் நீங்கும். காளஹஸ்தி சென்று வழிபட்டால் நன்மை கிட்டும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


இந்த நாள் நீங்கள் அடுத்தவருக்கு உதவி செய்வீர்கள். உங்கள் உதவியால் மற்றவர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். கவலைகள் தீரும். எம்பெருமான் அருளால் எல்லாம் நன்மையில் முடியும்.


கடக ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு அருமையான நாள் ஆகும். பேரும், புகழும் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெருமைகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மத்தியில் உங்கள் புகழ் அதிகரிக்கும். கடவுள் பக்தி அதிகரிக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு மறதி உண்டாகும். மறதியால் அவதிப்பட நேரிடும். முக்கிய விவகாரங்களை ஒத்திவைப்பது நல்லது. அடுத்தவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. நண்பர்களுடன் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். நீண்ட நாளாக உடலில் நீடித்து வந்த கோளாறு சீராகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும், திருமண பேச்சுக்கள் கைகூடும். மங்கள காரியங்கள் நடைபெறும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு தனவரவு உண்டாகும். எதிர்பாராத பணவரவால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்துப்பிரச்சினைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். பொன். பொருள் யோகம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள் ஆகும். அதிர்ஷ்டசாலி என்று உங்களை நீங்களே உணரும் வகையில் அதிசய சம்பவங்கள் நிகழும். நீண்ட நாள் கவலை ஒன்று நிரந்தர மகிழ்ச்சியாக மாறப்போகிறது. மனதிற்கு பிடித்தவர்களுடனான சந்திப்பு நிகழும். பணப்பிரச்சினைகள் முற்றிலும் தீரும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


இந்த நாள் மனதிற்கு நிறைவான நாளாகும். பெற்றோர்கள் - பிள்ளைகள் மனக்கசப்பு அகலும். பிள்ளைகள் பெற்றோர்கள் அறிவுரை கேட்டு செயல்படுவார்கள். குடும்பத்தில் புதுவரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசையொன்று நிறைவேறும். ஏகாம்பரேஸ்வரை வணங்கினால் நிம்மதிக்கு குறை வராது. 


மகரம் :


மகர ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொலைதூர பயணத்தால் மகிழ்ச்சி உண்டாகும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் பொங்கும். முக்கிய சந்திப்பு நிகழும். காதலர்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும். சிவபெருமான் ஆசியால் சிறப்பான நாளாக அமையும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிட்டும். கணவன் மனைவி இடையே நீடித்து வந்த மனக்கசப்பு அகலும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு மனதில் சிறு, சிறு கவலை ஏற்படும். தேவையற்ற குழப்பத்தால் சஞ்சலப்படுவீர்கள். அடுத்தவர் விவகாரத்தை பற்றி பெரிதும் சிந்திக்கக்கூடாது. நண்பர்களுடன் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. விநாயகப்பெருமானை வணங்கி சிறப்பு காணலாம்.