தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக கடைகளில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலும் பல பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தடுக்க போலீசாரும் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னையில் அமைந்துள்ள கொளத்தூர் பகுதியில் உள்ளது ஜி.கே.எம் காலணி. இந்த காலணியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி  வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வீட்டில் இருந்து பண்டல், பண்டலாக குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கண்டுபிடித்தனர். 




இதையடுத்து, கண்டுபிடிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 30 ஆயிரம் ஆகும் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சதீீஷ்குமார் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 31. சதீஷ்குமார் கொளத்தூர் பகுதியிலே நீண்டகாலமாக வசித்து வருபவர், 


Crime : 7 வகுப்பு மாணவன் மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய ஆசிரியர்.. பதைபதைக்கவைக்கும் அதிர்ச்சி தகவல்கள்


இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பை முடித்தவர். சதீஷ்குமார் தற்போது தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை சென்னைக்கு கொண்டு வந்து சிறு, சிறு கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். அவர் தொடர்ச்சியாக இதே வேலையில் செய்து வந்த நிலையில்தான், தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார், சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சென்னைக்கு கடத்தி கொண்டு வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.




இந்த நிலையில், வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சதீஷ்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி சதீஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பட்டதாரி இளைஞர் வீட்டில் பண்டல், பண்டலாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : Crime: 18 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம் செய்யத்தூண்டிய 7 பேர்! ஷாக் சம்பவம்!


மேலும் படிக்க : படிக்க சொல்லி அடிக்கடி வற்புறுத்திய அப்பா.... தன்னை யாரோ கடத்தியதாக நாடகமாடிய மகன்