ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிகாவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் கதறவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும்.  சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி பார்வையாளர்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுகின்றனர். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சேனலின் நிகழ்ச்சிகள், சீரியல்கள் டாப் 10 இடங்களை பிடித்து விடுவது வழக்கம். 






அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களின் கேள்வி பதில்கள், டாஸ்குகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பார்ட்டிக்கு நடிகைகள் ரேஷ்மா பசுபுலேட்டி, பிக்பாஸ் ஜூலி, கேபிரியல்லா ஆகியோர் பங்கேற்றனர். 






இதனைத் தொடர்ந்து ஒளிபரப்பான எபிசோட்களில் நடிகை அமலாபால், பாக்யலட்சுமி குடும்பத்தினர் கலந்து கொண்டார். இதில் அமலாபால் தனது இளம் வயதில் ஏற்பட்ட காதல் அனுபவம் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகை ஸ்ருத்திகா, தர்ஷன், அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் ஸ்ருதிக்காவிற்கு தரப்படும் கிஃப்டில் பொம்மை பல்லியை வைத்து அவரை ராஜூ, குரேஷி, மாகாபா ஆனந்த், தர்ஷன் ஆகியோர் பயம் காட்டுகின்றனர். 






பல்லியை கண்டு அலறி அடித்து ஸ்ருத்திகா அந்த செட்டை சுற்றும் வீடியோவும், அவரை மதுரை முத்து, மாகாபா ஆனந்த் கலாய்க்கும் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.