ஸ்ருதி ஹாசன்
முருகதாஸ் இயக்கிய 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ஷ்ருதி ஹாசன். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். 3 படத்தைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் அவர் நடித்த கப்பர் சிங் படம் பெரியளவில் வெற்றிபெறவே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. தமிழ் தெலுங்கு , இந்தி என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இதனிடையில் பாடல்களுக்கு இசையமைத்து அதில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன் . கடந்த ஆண்டு பிரபாஸின் சலான் படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேச்சி ஒன்றில் ஸ்ருதி ஹாசன் தனது கடவுள் நம்பிக்கை குறித்து பேசியுள்ளார்.
என்னுடைய மிகப்பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான்
என் வீடு ஒரு நாத்திக இல்லம். என் அம்மா ஆன்மீகவாதி ஆனால் என் அப்பாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. என்னுடைய மிகப்பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான். என் பக்தி என்னுடைய பெற்றோர்களிடம் இருந்து நான் பெற்றது இல்லை அது எனக்குள் நானே கண்டடைந்தது. சின்ன வயதில் நாங்க வசித்த காலணியில் நான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பேன். சில காரணங்களுக்காக பிரதான சாலையில் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் ஒரே நேரத்தில் அங்கு சர்ச்சில் மணியடிக்கும் சத்தமும் கோவிலில் மணியடிக்கும் சத்தமும் கேட்கும். அப்போது அங்கு என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன். என் வீட்டில் இருந்து கோவில் ரொம்ப தூரம் என்பதால் சர்ச்சுக்கு சென்றேன். என் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 5 மாதம் சர்ச்சுக்கு சென்று வந்தேன். என் வீட்டினர் யாருக்கும் அது தெரியாது. பொதுவாக குழந்தைகளிடம் இதை செய்யாதே என்று சொன்னால் அதை அவர்கள் செய்வார்கள் என் விஷயத்தில் அப்படி நான் செய்தது மதம். என் தாத்தாதான் என்னை முதன்முதலில் கோயிலுக்கு அழைத்து சென்றார். அதை என் வீட்டில் சொல்லக்கூடாது என்று சொன்னார். என் தாத்தா இறந்துவிட்ட பின்னும் அவருடன் நான் ஆன்மீக ரீதியாக தொடர்பில் இருக்கிறேன்.