கோவாவில் தனது கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா சரண், நீச்சல் குளத்தில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டான 2022 பிறந்திருக்கிறது. இந்த வருடத்தில் நினைத்தது நடக்க வேண்டும், துன்பங்கள் எதுவும் நேராமல் இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர். புத்தாண்டையொட்டி சினிமா நடிகர், நடிகைகள் தங்களின் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். சிலர் புகைப்படங்கள் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவருடன், நீச்சல் குளத்தில் லிப் கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் கணவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறினார். அவர்கள் கோவாவில் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, இதேபோன்று, முத்தமிட்ட புகைப்படத்தை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஸ்ரேயா ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்