இந்த உலக நிகழ்வில் இருந்து விடுபட்டு ஒவ்வொரு நாளும் 4 மணி நேரமாவது கானகத்தினுள்ளும், மலை மேடுகளிலும் நடந்து திரியாவிட்டால் எனது ஆரோக்கியத்தையும் உத்வேஎகத்தையும் பேண முடியாது என நினைக்கிறேன். -ஹென்ரி டேவிட் தோரோ


நடைபயிற்சி செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அது தான் நீண்ட ஆயுளுக்கான வழி. இன்னொன்று ஒரு மனிதர் செய்வதற்கு அதைவிட சிறந்த செயல் இல்லை.


2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு மருத்துவ இதழில் டாக்டர் பெட்ரோ செயின்ட் மாரிஸ் மற்றும் அவரது சகாக்கள், 2003 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் 4840 பேரின் அன்றாட நடைபயிற்சி பற்றிய திரட்டிய தவல்களை பதிவிட்டனர்.


அந்த ஆய்வின்படி அன்றாடம் 8000 முதல் 10000 அடிகள் நடந்தவர்கள் அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததும். அன்றாடம் 4000 அடிகள் நடந்தவர்கள் அதைவிட குறைந்த ஆயுளே கொண்டிருந்ததும் தெரியவந்தது. அன்றாட 8 முதல் 10 கிமீ நடப்பது என்பது சாதாரணம் அல்ல. அது தேவையும் கூட அல்ல. ஆனால் அன்றாடம் நடப்பது அவசியம் என்பது தான் அந்தக் கட்டுரையின் சாராம்சம்.


அன்றாடம் 4000 அடி என்பது 3.2 கி.மீ தூரத்துக்கு சமம். அதாவது அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை நீடிக்கும் நடைப்பயிற்சி. இந்தப் பயிற்சி தங்கள் வாழ்நாளில் தொடர்ச்சியாகப் பின்பற்றுபவர்கள் ஆரோக்கியமாக இருந்தனர்.
ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் சோஃபாவில் இருந்து எழுந்து அவ்வப்போது செய்தாலே 20% ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். ஒரு நாளைக்கு வெறும் 2000 அடிதான் நடக்கிறோம் என்றால் அது நடக்காமலேயே இருப்பதற்குக்கத்தான் சமம். தினமும் சாலையில் இறங்கி 4000 அடிகள் நடக்க வேண்டும். அவ்வாறு நடக்க இயலாவிட்டால் ட்ரெட் மில்லிலாவது நடக்க வேண்டும்.


ஃபிட்பிட்ஸ், ஆப்பிள் வாட்ச் போன்ற டிஜிட்டல் முறைகளில் உங்களின் நடைப் பயிற்சியை அளக்க முடிந்தால் செய்யவும். இல்லாவிட்டால் 30 முதல் 45 நிமிடம் வரையில் ஆக்டிவான நடைப்பயிற்சி என மேற்கொள்ளவும்.
இதைச் செய்ய காலுக்கு இதமான காலணி, சவுகரியமான உடை, வயதானவர்கள் என்றால் ஊன்றுகோல் ஆகியன போதும்.  
அன்றாடம் எளிமையாக செய்யக் கூடிய ஒரே ஒரு உடற்பயிற்சி நடைப்பயிற்சி தான். 


நடைப்பயிற்சியில் நிறைய வகை உள்ளது. ஓட்டமாக செல்லலாம். வேகமாக நடக்கலாம். மெதுவாக நடக்கலாம். புத்தர் நடை நடக்கலாம், மெதுவாகவும் வேகமாகவும் என மாறி மாறி வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் நடக்கலாம்.
சிலர் நடக்கும் போதே ஃபோன் பேசிக் கொண்டோ அல்லது பாட்டு கேட்டுக் கொண்டோ நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படியெல்லாம் எந்த வித இடையூறும் இல்லாமல் நடக்க வேண்டும். செல்ஃபோனை நடைப்பயிற்சியின் போது ஸ்விட்ச் ஆஃப் செய்வதைப் போன்று சிறந்த வேலை எதுவுமில்லை. 




1862ல் ஹென்ரி தோரோ நடப்பது பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருப்பார். அதை ஒவ்வொருவருமே படிக்க வேண்டும். அதில் அவர், இந்த உலக நிகழ்வில் இருந்து விடுபட்டு ஒவ்வொரு நாளும் 4 மணி நேரமாவது கானகத்தினுள்ளும், மலை மேடுகளிலும் நடந்து திரியாவிட்டால் எனது ஆரோக்கியத்தைப் பேண முடியாது என நினைக்கிறேன் என்று கூறியிருப்பார்.
அன்றாடம் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நடக்கவும். அதுவும் செல்ஃபோன் இல்லாமல் நடக்கவும். அவ்வாறு செய்தால் ஆரோக்கியம் மேம்படும் ஆயுள் நீட்டிக்கப்படும். 


இந்தக் கட்டுரையை எழுதியவர் பாவின் ஜான்காரியா. இவர் ஒரு ரேடியாலஜிஸ்ட். 30 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கிறார். மனிதர்கள் தாங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டியதற்கான அவசியத்தை உணர வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.