விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது ஒரு சில படங்களிலும் பாடல் பாடியுள்ளார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்தது. புகழுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் படியே இருந்தன. பாசமலர் என்றால் புகழ் - சிவாங்கி தான் என்றும் பேச தொடங்கினார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சிவாங்கி சன் டிவியில் ஒளிபரப்பாகும் நானும் ரவுடி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி திரை பிரபலங்கள் ஒரு பக்கம், சிறுவர்கள் மறுபக்கம். இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டிதான் சுவாரஸ்யமாக இருக்கிறது. ரசிகர்களை கவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது இருக்கிறது. இதைத்தொடர்ந்து சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியிலும் சிவாங்கி கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சி செம ரகளையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிவாங்கி பாட்டு பாடுவதும் மட்டும் அல்லாமல், காமெடியிலும் ரசிக்க வைத்து விடுவார்.
சிவாங்கி எப்போதும் ஜாலியாக, பாடகர், டான்சர் நடிகை என பன்முகத்திறமையோடு விளங்குகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் காதல் தோல்வி பற்றி பேசி ரசிகர்களை கண்ணீர் மழையில் நனைய வைத்தார். எல்லோருக்கும் போலவே எனக்கும் காதல் அழகாக தெரிந்தது. நானும் நேசித்தேன். காதல் தான் முக்கியம் என்று நினைத்திருந்தேன். காதல் பிரேக் அப் பல விஷயங்களை கற்றுக்காெடுத்தது. அதில் இருந்து வெளியே வர கஷ்டமாக இருந்தாலும், மீண்டு வந்து விட்டேன் என வலி நிறைந்த வார்த்தைகளோடு தெரிவித்திருந்தார்.
காதல் பிரேக் அப்பிற்கு பிறகு பிஸியாக இருக்கும் சிவாங்கி தற்போது தனது குடும்பத்தினருக்கு செம சர்ப்ரைஸ் செய்துள்ளார். சிவாங்கி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றை வாங்கியுள்ளார் அதன் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். அவரது அப்பா, அம்மா உடன் சென்று அந்தக் காரை அவர் வாங்கியிருக்கும் வீடியோவை நெகிழ்ச்சியாக அவர் instagram-ல் வெளியிட்டுயுள்ளார். இதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.