நடிகை ரகுல் ப்ரீத் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியின் திருமணத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடனம் ஆட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ரகுல் ப்ரீத்


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை  ரகுல் ப்ரீத் சிங். 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.  'தடையறத் தாக்க'. படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்


இதனைத் தொடர்ந்து ’தீரன்’ அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் நடித்திருந்தார். மேலும்  ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள’ இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார்.


காதலித்தவரை கரம்பிடிக்கப் போகும் ரகுல் ப்ரீத்


இப்படியான நிலையில் , ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும்  நடிகருமான ஜாக்கி பக்னானி ஆகிய இருவருக்கும்  வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த  நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்கள்.  இன்னும் மூன்று நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. 


கோவா கடற்கரையை ஒட்டி மிகவும் பிரம்மாண்டமாக இந்த  திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.  ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி இருவரும்  தங்களது திருமணத்தைப் பற்றி பெரியளவில் பத்திரிகைகளில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்கள். மேலும் இந்த திருமணத்தில் இரு வீட்டார்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதை தவிர்த்து ஒரு சில முக்கிய பிரபலங்களை இந்த திருமணத்தில் எதிர்பார்க்கலாம்.  இந்நிலையில் இந்த திருமணம் நடைபெற இருக்கும் இடத்தில் இருந்து வரவேற்பு பலகை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.






ஷில்பா ஷெட்டி நடனம்


இந்த திருமணத்தின் போது தனது மனைவியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஜாக்கி பக்னானி சில சர்ப்ரைஸ் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது காதலை விளக்கும் வகையில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் இந்த திருமணத்தில் இந்த பாடலை ரகுல் ப்ரீத்துக்கு அவர் சமர்பிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இந்த திருமணத்தில் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.