2013ம் ஆண்டு பிரபல இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்த படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக நடித்து திரையுலகில் களமிறங்கினர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஷாலுவிற்கு வரத்தொடங்கியது.
திருட்டு பயலே 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தார் ஷாலு ஷம்மு. தொடர்ந்து, பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் இவர் அவ்வப்போது பல அசத்தல் போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது சில கிளாமர் போட்டோஷூட்களை வெளியிடுவது பலரும் அறிந்ததே. அந்தவகையில், தற்போது பீரோ ஒன்றுக்குள் ஹாட் போட்டோஷூட் எடுத்த வீடியோ படு கவர்ச்சியாக இருந்து வருகிறது. இதை வீடியோவை பலரும் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிங்க் நிற சிம்மிஸ் மற்றும் குட்டையாக சாட்ஸ் அணிந்து அவர் எடுத்த வீடியோ க்ளிப்ஸ் தான் இப்ப டாப்.
பட வாய்ப்புகளுக்காக தான் அவர் இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார். ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து பெண்ணாக தெரிந்தார், ஆனால் இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அவர் மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருவதுதான். இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்கிறது. அதேபோல் தவறாக யார் விமர்சனம் செய்தாலும் தட்டிவிட்டு செல்லும் இவர், இறுதியாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக வந்த ”இரண்டாம் குத்து ” படத்தில் நடித்து இருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்