Valentine's Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலிக்கும் நபருக்கு தங்களது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

காதல் திருமணம் வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பதை நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன வீடியோ பற்றி காணலாம். 

Continues below advertisement

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சரண்யா. அடுத்த சில ஆண்டுகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகரை முதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டனர். 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமணம் 29 ஆண்டுகளை எட்டி தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். 

இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். சரண்யா பொன்வண்ணன் தான் தமிழ் சினிமாவின் டாப் மோஸ்ட் அம்மா நடிகையாக வலம் வருகிறார். விஜய் தவிர்த்து மற்ற அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்து விட்டார். பொன்வண்ணனும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலான கேரக்டரில் நடித்து வருகிறார். 

இதனிடையே உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலிக்கும் நபருக்கு தங்களது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சரண்யா பொன்வண்ணன், வெற்றிகரமான காதல் வாழ்க்கை அமைவதற்கான முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். 

அதில், “காதல் கல்யாணத்துல இருக்குற முக்கியமான மைனஸ் என்னன்னு பார்த்தால், காதலிக்கும்போது நிறைய சொல்வாங்க. அடிக்கடி வெளியே கூப்பிட்டு போவாங்க, கிஃப்ட் வாங்கி கொடுப்பாங்க. இனிமையான சொற்கள் எல்லாம் பேசுவாங்க. அழகா இருக்க என்கிற மாதிரியெல்லாம் சொற்கள் சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு பிறகு இவ என்னுடையவள், எனக்கு சொந்தமானவள். இதெல்லாம் சொல்லிகிட்டா இருக்கணும்ன்னு தோணும். குழந்தை பொறக்கலாம், ஆபீஸ் வேலை, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

அதனால் வெளியே கூப்பிட்டு போகிற எண்ணம் தோன்றாமல் இருக்கலாம். 5 வயசுல நமக்கு சைக்கிள் வேணும்ன்னு தோணும். 10 வயசுல நமக்கு வேற ஒன்று தோன்றும். 5 வயசு ஃபீலிங் 10 வயசுல இருக்காது இல்லையா? . அதேமாதிரி தான் காதலிக்கும் போது இருக்கும் எண்ணம் கல்யாணத்துக்கு பிறகு எப்படி இருக்கும். அதுவேறு இதுவேறு என புரிந்து கொள்ள வேண்டும். இதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்தால் காதல் கல்யாணம் கண்டிப்பாக ஜெயிக்கும்.  முக்கியமாக இருவருக்கும் சண்டை வர அப்ப ஒன்னு சொன்னீங்க, இப்ப ஒன்னு செய்றீங்கன்னு இந்த விஷயத்துல தான் சண்டை வரும். இதை புரிந்து கொண்டால் கண்டிப்பாக காதல் கல்யாணம் வெற்றிகரமாக அமையும்” என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Valentine's Day: காதலர் தின சிறப்பு ராசி பலன்.. உங்கள் ராசிக்கு தம்பதியரின் காதல் வெற்றியா ? தோல்வியா ?

Continues below advertisement