உலகெங்கிலும் வரும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் காதலர் தினத்திற்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  சினிமாவிலும் காதல் என்பது இன்றியமையாத ஒரு அங்கமாகிவிட்டது. அந்த வகையில்  காதலர் தினத்தன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் காவியங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்து காதலர்களை மகிழ்விக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் காதல் படங்கள் என்னென்ன என்பதன் தொகுப்பு :


96 : ராம் - ஜானு :


விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் ரசிகர்களை அவர்களின் பள்ளி பருவத்து  காதலுக்கு ரீ வைண்ட் செய்ய வைத்து அவர்களோடு சேர்ந்து உருக வைத்த திரைப்படம். மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி ரீ ரிலீஸாக உள்ளது. 


 



வாரணம் ஆயிரம் : சூர்யா - மேக்னா


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான மற்றுமொரு காதல் காவியம். சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் சூர்யா - சிம்ரன், சூர்யா - சமீரா ரெட்டி, சூர்யா - திவ்யா ஸ்பந்தனா என மூன்று காதல் கதைகளின் ஒரு முழுமையான தொகுப்பு. சளைக்காமல் படம் முழுக்க காதலால் நிரம்பி வழிந்த இப்படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. 


மின்னலே : ராஜேஷ் - ரீனா ஜோசப் 


கௌதம் வாசுதேவ் மேனன் என்ற தனித்துமான இயக்குநரை அறிமுகப்படுத்திய திரைப்படம். மாதவன், ரீமா சென், அப்பாஸ், நாகேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் காலங்களை கடந்தும் உற்சாகம் கொடுக்கும் ஒரு மாறுபட்ட காதல் படம். ஐந்தே நாட்களில் ஒரு பெண்ணுக்கு அறிமுகமாகி அவளை உருக வைத்து வாழ்க்கையையே மாற்றிவிடும் ஒரு மேஜிக்கல் திரைப்படம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்.  


சீதா ராமம் : ராம் - சீதா 


துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான இப்படம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரை ரசிகர்களையும் கலங்க வைத்த திரைப்படம். உன்னதமான காதலின் மகிமையை வெளிக்காட்டிய இந்த ரம்மியமான திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 


 



 


சிவா மனசுல சக்தி : சிவா - சக்தி 


ஜீவா, அனுயா நடிப்பில் வெளியான இப்படம் ஒரு வித்தியாசமான டைப் காதல் படம். ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதையே கொள்கையாக வைத்து இருந்த இவர்களுக்குள் எப்படி காதல் வந்தது என்பதை ஒரு சுவாரஸ்யமான கதையாக கொடுத்து இருந்தார் இயக்குநர் எம். ராஜேஷ். இந்த ஜாலியான காதல் படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. 


பிரேமம் : ஜார்ஜ் டேவிட் - மலர் 


நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் மிக சிறந்த படைப்பாகும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் மூன்று காலகட்டத்தில் ஏற்பட்ட காதலை ஒரு அழகான கோர்வையாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


 



விண்ணைத்தாண்டி வருவாயா : கார்த்திக் - ஜெஸ்ஸி 


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான ரொமான்டிக் திரைப்படம். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு வரும் எதிர்ப்பு அதனால் முடிவுக்கு வருகிறது அவர்கள் காதல். ரியல் லைஃபில் காதலை தொலைத்தாலும் தன்னுடைய படத்தில் காதலர்களை ஒன்று சேர்த்து வைக்கும் சிம்புவின் கிளைமாக்ஸ் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.  


தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே : ராஜ் - சிம்ரன் 


ஷாருக்கான் மற்றும் கஜோலின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய ஒரு திரைப்படம். பிப்ரவரி 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.  


 



டைட்டானிக் : ஜாக் - ரோஸ்


கப்பல் மூழ்கினாலும் ஜாக் மற்றும் ரோஸின் காதல் கதை மூழ்காத கப்பலாகவே இருந்தது 'டைட்டானிக்' படத்தில் தான். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4கே வெர்ஷன்,  3டி என வெளியாகி கூட இப்படம் மீது காதலர்களுக்கு இருக்கு கிரேஸ் சற்றும் குறையவேயில்லை. 


ஓம் சாந்தி ஓஷானா : கிரி மாதவன் - பூஜா மேத்யூ


ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் நெகிழ வைத்த ஒரு காதல் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.