”10 பலி ஆடு கூடவே இருக்கும்... மடையனுங்க”- நடிகர் விஷாலை கடுமையாக சாடிய நடிகை சங்கீதா

"சாப்பிட உணவு இல்லாம நான் குழந்தைக்கு சாதம் வடிக்க எடுத்துட்டு போன குக்கர்லதான் சாப்பாடு செய்துக்கொடுத்தேன்."

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷால் . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நடிகர் சங்க தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அப்போது கலைநிகழ்ச்சிகள் மூலம் நடிகர் சங்க வணிக வளாகம் கட்டுவதற்கான நிதி திரட்ட முயற்சிகளையும் கூட முன்னெடுத்தார் . அந்த சமயத்தில் நடிகை சங்கீதா விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

Continues below advertisement

 

"விஷால் வந்து சொல்லுவாரு...சங்கீதாக்கிட்ட சொன்னேன் உங்கக்கிட்ட சொல்லலியானு சொல்லுவாரு.  அவர் என்கிட்ட அதை சொல்லியே இருக்க மாட்டாரு. அது அவரோட அஜாக்கிரதை. அவர் எப்போதுமே  ஸ்பாட்டுக்கு கடைசி நேரத்துலதான் வருவாரு. ஏன்னா அவரு ஹீரோ...சினிமால எல்லாம் முடிஞ்ச பிறகு கடைசியா வருவாங்கள்ல போலீஸ் அதுபோல வருவாரு. அந்த மாதிரி நாங்க எல்லா வேலையும் செய்து முடித்த பிறகு , கடைசி நேரத்துல வந்துட்டு ஹேய் அதை செய்துட்டியா , இதை செய்துட்டியா... நான் சொன்னனே ...நான் சொன்னனேனு சொல்லுவாரு.10 பலி ஆடு வச்சுருப்பாரு. உங்கக்கிட்ட சொல்லலியா இவனுங்க..டேய் என்னடா இப்படி பண்ணிட்டனு சொல்லுவாரு. இப்படியே பண்ணி பண்ணி கடைசியா ,பலியை நம்ம மேல போட்டுட்டு , நாம சம்மந்தப்பட்ட நபர்களுக்கு ஜென்ம விரோதி போல மாற்றிடுவாரு. நாம தப்பு பண்ணாமலே கெட்டவங்க ஆயிடுவோம். அவர் ரொம்ப நல்ல பிள்ளையா மாறிடுவாரு. பாக்குறவங்க அய்யோ அந்த பிள்ளையா..தங்கமான பிள்ளையாச்சே.. அவரை போய் தப்பா சொல்லுறீங்களே அப்படினு சொல்லுவாங்க.. இது எனக்கு சேப்பாக்கம் கலை நிகழ்ச்சியில  நடந்த உண்மையான சம்பவம். அங்க 500 பேர்க்கிட்ட வந்திருந்தாங்க. அதுல 60 பேர் வயசானவங்கள் . சாப்பிட உணவு இல்லாம நான் குழந்தைக்கு சாதம் வடிக்க எடுத்துட்டு போன குக்கர்லதான் சாப்பாடு செய்துக்கொடுத்தேன். இரண்டே பேர்க்கிட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் கொடுத்தது தப்பு. பகிர்ந்து கொடுத்திருக்கனும். பெரிய இசையமைப்பாளர்கள் எல்லாம் இலவசமாக பண்ணிக்கொடுத்தாங்க. ஆனால் அவங்களுக்கு  மரியாதை கிடைக்கல. எல்லோரும் வருத்தப்பட்டாங்க. ஆனா விஷால் ரொம்ப சந்தோசப்பட்டாரு. நாம செய்துக்காட்டிட்டோம்னு. அப்போ எனக்கு டேய் மடையனுங்களா இவ்வளவு பேர கஷ்டப்படுத்திட்டு உனக்கு என்னடா சாதனைனு எனக்கு அப்போ தோணுச்சு“ என விஷாலை கடுமையாக சாடியிருக்கிறார் சங்கீதா

Continues below advertisement
Sponsored Links by Taboola