ஸ்ருதி நாராயணன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாரயாணனின் ஆபாச வீடியோ தமிழ் சினிமாத் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் பட வாய்ப்பிற்காக ஸ்ருதி நாராயணன் வற்புறுத்தப்பட்டதாகவும் அப்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை வேண்டுமென்றே இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்தார். இந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டாவதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்ருதி நாராயணனின் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் ஸ்ருதி தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரால் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறி வருகிறார்கள். மேலும் தவறை செய்துவிட்டு ஸ்ருதி ஆண்களின் மீது மட்டும் பழி போடுகிறார் என அவர் பக்கம் திரும்பியுள்ளார்கள் நெட்டிசன்ஸ்.
ஸ்ருதி நாராயணன் பற்றி சனம் ஷெட்டி
சினிமா வாய்ப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவது குறித்த விவாதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இப்படியான நிலையில் பிரபல நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் " சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணின் ஆடிஷன் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ உங்களிடம் இருந்தால் ஷேர் செய்யாதீர்கள். காம வெறி பிடித்து இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு காமம் வராது பரிதாபம் தான் வரும் . இது ஒரு தனிப்பட்ட விஷயம் கிடையாது. இது காஸ்டிங் கால் என்கிற திட்டமிட்ட ஒரு செயல் , படத்தில் வாய்ப்பு வேணும் என்றால் படுக்கனும் . வீடியோ காலில் அவர்கள் சொவதை செய்யனும். ஒரு பிரபல இயக்குநரின் மேனேஜர் என்னவெல்லாம் பண்ண வைக்க முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதில் ஒரே கேள்விதான் வருகிறது. ஆடிஷன் என்கிற பெயரில் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா. இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா. போய் குப்பையில் போடுங்கள் உங்கள் படத்தை. ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை. இன்னொரு பக்கம் இந்த செயல்களில் எல்லாம் ஈடுபடாமல் இருக்கும் என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.
இந்த தப்பு செய்யத் தூண்டுபவர்களை குற்றம் சொல்லும் நேரத்தில் இந்த தப்பை செய்தவர்களை குற்றம் சொல்லதான் செய்கிறோம். ஆனால் ஸ்ருதி இந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை ஏஐ என்று என்று சொல்கிறார். இந்த வீடியோவில் இருப்பது அவர்தான் என்றால் அவர் பாதிக்கப்பட்டவர். இதில் சம்பந்தபட்டவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும். தமிழ் சினிமாத்துறைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்க சினிமாத் துறை நாறிப்போய் கிடக்கிறது. எங்களுக்கு ஒரு பாதுக்காப்பான சூழலை ஏற்பாடு செய்து கொடுங்கள்" என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்