சமந்தா


நடிகை சமந்தா தனக்கு மையோசிடிஸ் (தசை அழற்ச்சி பாதிப்பு) இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து தனது வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது , கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது , உணவு முறைகளை மாற்றுவது என தனது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் சமந்தா ஆன்மிக ரீதியாக தன்னை அதிகம் வழிநடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று அந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.  


ஒரு நல்ல குரு கிடைப்பது ரொம்ப அரிது


சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையம் சென்ற சமந்தா தனது தியானம் குறித்த அனுபவங்களை தனத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஈஷா யோகா மையத்திற்கு வந்த மற்ற ஆர்வலர்கள் உடன் சேர்ந்து தியானம் செய்த சமந்தா தனத் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டார்.   இந்த பதிவில் அவர் “ஒரு நல்ல குரு கிடைப்பது என்பது ரொம்பவும் அரிது. அதுவும் உங்கள் வாழ்க்கையை ஒளிமையமாக்கும் பார்வைகொண்ட ஒரு குரு கிடைப்பது என்பது ஒரு அதிர்ஷ்டம் தான். நீங்கள் ஞானத்தை அடையவேண்டும் என்றால் நீங்கள் இந்த உலகத்தில் அதை தேடிச் செல்ல வேண்டும் , நம் தினசரி வாழ்க்கையில் பலவிதமான விஷயங்கள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது சாதரணம் தான் என்று நாமும் இதை கடந்து செல்கிறோம். ஆனால் இது சாதாரணமான விஷயம் இல்லை. அதனால் நாம் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கிறது. வெறும் அறிவு மட்டும் போதுமானது இல்லை. நாம் பெற்ற அறிவை செயல்படுத்துவதே முக்கியம்” என்று சமந்தா இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 






சிட்டெடல்


ஹாலிவுட்டில் ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய சிட்டெடல் வெப் சீரிஸ்சின் இந்திய ரீமேக்கில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடரில் வருன் தவான் இணைந்து நடித்துள்ளார். இது தவிர்த்து பங்காரா என்கிற தெலுங்கு படத்தை தயாரித்து நடிக்கவும் இருக்கிறார். அல்லூ அர்ஜூன் நடித்து அட்லீ இயக்கவிருக்கும் படத்திலும் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.