12th Supplementary Exam 2023: 12, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; முழு அட்டவணை இதோ!

12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியைத் தழுவிய மாணவர்களுக்காக துணைத் தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியைத் தழுவிய மாணவர்களுக்காக துணைத் தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 19ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன.  

Continues below advertisement

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 03ஆயிரத்து 385 மாணவ-மாணவிகள் எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று காலை 10.05 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொண்டனர். 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தனர். இவர்களுக்கான துணைத் தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை

19.06.2023 - மொழிப்பாடம்

20.06.2023 - ஆங்கிலம்

21.06.2023- கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்
நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம் (ETHICS AND INDIAN CULTURE)
கணினி அறிவியல்
கணினி பயன்பாடுகள்
உயிர் வேதியியல்
மேம்பட்ட மொழி (தமிழ்)-  (ADVANCED LANGUAGE (TAMIL) )
வீட்டு அறிவியல் (HOME SCIENCE)
அரசியல் அறிவியல்
புள்ளிவிவரங்கள் (STATISTICS)
நர்சிங் தொழிற்கல்வி
அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

22.06.2023 - இயற்பியல்
பொருளாதாரம்
கணினி தொழில்நுட்பம்

23.06.2023 - கணிதம்
விலங்கியல்
வர்த்தகம்
மைக்ரோ உயிரியல்
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்
உணவு சேவை மேலாண்மை
வேளாண் அறிவியல்
நர்சிங் (பொது)

24.06.2023 - உயிரியல்
தாவரவியல்
வரலாறு
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
அடிப்படை சிவில் இன்ஜினியரிங்
அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

26.06.2023 - வேதியியல்
கணக்கு
நிலவியல்.

11ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை

27.06.2023 - மொழிப் பாடம்

28.06.2023 புதன்கிழமை பகுதி -II ஆங்கிலம்

30.06.2023 வெள்ளிக்கிழமை பகுதி -III
இயற்பியல்
பொருளாதாரம்
கணினி தொழில்நுட்பம்
வேலை வாய்ப்பு திறன்கள்

01.07.2023 - உயிரியல்
தாவரவியல்
வரலாறு
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
அடிப்படை சிவில் இன்ஜினியரிங்
அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

03.07.2023 - வேதியியல்
கணக்கு
நிலவியல்

04.07.2023 - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்
நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்
கணினி அறிவியல்
கணினி பயன்பாடுகள்
உயிர் வேதியியல்
மேம்பட்ட மொழி (தமிழ்)
வீட்டு அறிவியல்
அரசியல் அறிவியல்
புள்ளிவிவரங்கள்
நர்சிங் தொழிற்கல்வி
அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

05.07.2023 - கணிதம்
விலங்கியல்
வர்த்தகம்
மைக்ரோ உயிரியல்
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்
உணவு சேவை மேலாண்மை
வேளாண் அறிவியல்
நர்சிங் (பொது)

Continues below advertisement
Sponsored Links by Taboola