சாய் பல்லவி 


நடிகை சாய் பல்லவி தற்போது இந்தியில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். தங்கல் படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்குகிறார். ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் இப்படத்தில் நடிக்கிறார்கள். கே.ஜி.எஃப் புகழ் யாஷ் ராவணனாக நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். 


சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?


சாய் பல்லவி இப்படத்தில் நடிப்பது குறித்து பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை தான் அசைவம் சாப்பிடுவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும் வெளியூரூக்கு செல்லும் போது சாய் பல்லவி தன்னுடன் சமையல்காரர்களை அழைத்து செல்வதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்து தற்போது சாய் பல்லவி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


எச்சரிக்கை கொடுத்த சாய் பல்லவி


" என்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமான தகவலகள் வெளியாகும் போது பெரும்பாலும் நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் சமீப காலங்களில் எனது படங்கள் வெளியாகும் நேரத்தில் எல்லாம் என்னைப் பற்றிய தவறான செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. ஓய்ந்தபாடில்லை. என் கரியரில் மகிழ்ச்சியான தருணங்களில் இந்த மாதிரியான செய்திகள் வருவதால் நான் பேச வேண்டியதாக இருக்கிறது. இனிமேல் எந்த ஒரு பிரபல ஊடகமும் என்னைப் பற்றிய கண்ட கண்ட செய்திகளை வெளியிட்டால் நீங்கள் என்னை சட்டப்பூர்வமாக சந்திக்க வேண்டியதாக இருக்கும்" என சாய் பல்லவி கூறியுள்ளார். 






எப்போதுமே அன்பாகவும் சிரித்துக் கொண்டும் இருக்கும் சாய் பல்லவியவே இப்படி வார்னிங் கொடுக்க வைத்துவிட்டார்களே என ரசிகர்கள் சாய் பல்லவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள்