90களின் தொடக்கத்தில் நடிகையான ரோஜா, தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 90களின் இறுதியில், பீக்கில் இருந்த நடிகை ரோஜா பொது வாழ்க்கையில் இறங்கினார். ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என பெயர் பெற்ற நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சட்டப் பேரவைக்கு 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், கடந்த 2014 சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கா ரெட்டிக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திராவில் அமைச்சராக பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார். 


நடிகை ரோஜாவுக்கும், இயக்குநர் செல்வமணிக்கும் அன்சுமாலிகா, கிருஷ்ணா லோஹித் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர்களின் மூத்த மகளான அன்சுமாலிகா இளம் வயதிலேயே சிறந்த எழுத்தாளர் என்ற விருதை பெற்றுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நடிகையின் மகள் நடிகையாகதான் வேண்டும் என்று யாரோ சொல்வதை கேட்காமல் தனக்கு என்ன தெரியும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதில் தனது திறமையை வெளிபடுத்தி அசத்தியுள்ளார். 


அன்சுமாலிகாக்கு சிறுவயதில் இருந்தே எழுத்துவதில் ஆர்வம் அதிகம். அதன் காரணமாக எழுத்து துறையில் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டராக அசத்த, மறுபுறம் அன்சுமாலிகா எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ‘ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. 






இந்தநிலையில், அன்சுமாலிகா எழுதிய தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகத்திற்காக தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாலிவுட் பிரபலம் சஜன் அவர்களின் கைகளில் இருந்து கல்கத்தாவில் எனது புத்தகத்திற்கு மற்றொரு விருது கிடைத்தது.


ஜி டவுன் இதழிலிருந்து தென்னிந்தியாவில் இருந்து சிறந்த ஆசிரியருக்கான விருது கிடைத்தது மிகவும் உற்சாகமாக உள்ளது. உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் பெறும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் விருது பெற்ற அந்த புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.  இதையடுத்து பலரும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.