துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் ரோஜாவின் வாரிசு... விரைவில் வெளியாகும் அறிவிப்பு

நடிகை ரோஜா - இயக்குனர் செல்வமணி மகள் அன்சுமாலிகா, நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஜோடியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்.

Continues below advertisement

90'ஸ் களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி, சிரஞ்சீவி, கார்த்திக், பிரபு, சத்யராஜ், பிரஷாந்த் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரோஜா. அவரின் மகள் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஜோடியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளர். 

Continues below advertisement

திரைக்கு வரும் அடுத்த வாரிசு :

நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை 2002ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர். ரோஜாவின் மகள்  அன்சுமாலிகா நீண்ட காலமாகவே மீடியாவில் இருந்து வருகிறார்.  'தி ஃபிளேம் இன் மை ஹார்ட்' என்ற புத்தகத்தை எழுதி "2021 ஆம் ஆண்டின் சிறந்த சமூக சேவகர்" என்ற விருதை பெற்றுள்ளார். இந்த திறமையான படைப்பாளி தற்போது வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க உள்ளார். 

 

துருவ் விக்ரம் ஜோடியாகும் ரோஜா மகள் : 

அன்சுமாலிகா தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக அன்சுமாலிகா அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் துருவ் விக்ரம். இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் நடித்த "மஹான்" திரைப்படத்திலும் அப்பா மகன் இருவரும் நடித்திருந்தனர். 

Continues below advertisement