இயக்குநர் ராம் சங்கையா இயக்கி பசுபதி நடித்திருக்கும் படம் தண்டட்டி. தட்டட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. பசுபதி, ரோகிணி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து சாம் சி.எஸ் பின்னணி இசை கொடுத்திருக்கிறார். தண்டட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ரோகிணி
மகளிர் மட்டும், மறுபடியும், விருமாண்டி, பாகுபலி ஆகியத் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகர் ரோகிணி. மேலும் கேள்விகள் ஆயிரம் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது அதிரடியான கேள்விகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தொடர்ச்சியால குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரோகிணி. தற்போது தண்டட்டி படத்தில் நடித்துள்ளார்
தங்கப்பொண்ணு
தண்டட்டி திரைப்படத்தில் நடிகர் ரோகிணி தங்கப்பொண்ணு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோகிணி. அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கரியரில் முக்கியமான திரைப்படங்கள் குறித்தும் தனது திரையுலக அனுபவத்தை பற்றியும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்காம விட்டதுக்காக ஃபீல் பன்னேன்
அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ரோகிணி “ நிறைய அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள். அவர்கள் கதையை விவரிக்கும்போதே எனக்கு ஓரளவிற்குத் தெரியும். அந்தப் படம் நன்றாக இருக்குமா இல்லையா என்று. வெகு சில நேரங்களில் இந்த கணிப்பு தவறாக இருக்கும். விஜய் தேவரகொண்டா நடித்த முதல் படத்தில் நடிக்க எனக்கு கதை சொன்னார் இயக்குநர். ஆனால் அந்த கதை எனக்கு சரியாக பிடிபடவில்லை. ஆனால் படம் வெளியான பின்புதான் அந்தப் படத்தை நான் ஏன் மிஸ் செய்தேன் என்று வருத்தப்பட்டேன். தண்டட்டி திரைப்படத்தின் கதையைக் கேட்ட அந்த நொடியே நான் அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டேன். இளைஞர்களுடன் வேலை செய்யும்போது நாம் விரல் நுனியில் நிற்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் அவ்வளவு வேகமாக இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சறுக்கி விழவும் செய்வார்கள்.
பாகுபலிதான் என்னை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது.
தனக்கு பிடித்த படங்களை பற்றி தெவித்தார் ரோகிணி “மகளிர் மட்டும் , மறுபடியும், விருமாண்டி, பாகுபலி ஆகிய படங்கள் எனக்கு மிகப் பிடித்த படங்கள். குறிப்பாக பாகுபலி படம் என் கரியரில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இன்றைய தலைமுறையிடம் என்னை கொண்டு சேர்த்த திரைப்படம் பாகுபலிதான்.
தண்டட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாஸிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.