தலைவர் 170


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது (Thalaivar 170) படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய த. செ.ஞானவேல் இப்படத்தை இயக்க அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்து வருகிறார்கள்.  அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


படப்பிடிப்பின் போது காயம்


தலைவர் 170 படத்தில் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங் (Rithika Singh) முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். முன்னதாக ரஜினியுடன் நடிக்கும் தன்னுடைய மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அவர்.