Cyclone Michaung: மிக்ஜாம் புயல் எதிரொலி! திருப்பதியில் உருவாகிய திடீர் அருவி - பக்தர்கள் பரவசம்

மிக்ஜாம் புயல் காரணமாக திருப்பதியில் திடீர் அருவி உருவாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.

Continues below advertisement

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னை முழுவதும் சாலைகள் வௌ்ளமாக காட்சியளித்தது. சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயல் தற்போது ஆந்திராவில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா அருகே மிக்ஜாம் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்க உள்ளது.

Continues below advertisement

திருப்பதியில் திடீர் அருவி:

இதன் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், திருப்பதி, வடக்கு கோதாவரி, கோனசீமா, நெல்லூர், பிரகாசம், கிருஷ்ணா, பாபட்லா, குண்டூர், திருப்பதி, சித்தூர், அன்னமயா, கடப்பா ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் மழை காரணமாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், மழை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதை அருகே உள்ள வழக்கமான அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

ரெட் அலர்ட்:

இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்யும் மழை காரணமாக புதியதாக அருவி உருவாகியுள்ளது. இந்த அருவியில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதன் சாரல்களில் நனைந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக திருப்பதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் அங்கு பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் வசித்த வரும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: School College Leave: கனமழை எதிரொலி..! சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மேலும் படிக்க: Cyclone Michaung; வெள்ளச்சேரியான வேளச்சேரி! மிதக்கும் மடிப்பாக்கம்! வடியாத வடசென்னை!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola