அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன. உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
மிதுன ராசி:
ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து தொழில்களின் மேன்மையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருகிறார். ராகுக்கு வீடு கொடுத்த குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமரும்போது எதிலும் வெற்றி கெட்டப் போகிறது. டிசம்பர் 30ஆம் தேதி வரை சற்று நிதானமாக செயல்பட்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு புதிய முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியை தரும்.
மிதுன ராசிக்கு புதன் பகவான் டிசம்பர் 13 ஆம் தேதி ராசிக்கு ஏழாம் வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியைத் தேடித் தரப் போகிறார். தனுசு ராசி பாதகாதிபதியின் வீடா ஆயிற்றே அவர் எப்படி நன்மை செய்வார் என்ற சந்தேகம் பலருக்கு இடலாம். ஆனால் தனுசு வீட்டில் எந்த கிரகமும் நீச்சம் அடையாது, பகை அடையாது என்பதால் அந்த வீட்டில் நுழையும் கிரகங்கள் அனைத்தும் நன்மையே செய்யும்.
புதன் ஏழாம் வீட்டில் நுழையும் பொழுது உங்களுடைய வாழ்க்கைத் துணையின் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். டிசம்பர் மாதத்தில் நிகழப்போகும் ஐந்து கிரக பெயர்ச்சிகளும் கிட்டத்தட்ட மிதுன ராசிக்கு சாதகமாகவே அமையப்போகிறது. ஏனென்றால், மிதுன ராசிக்கு ஏழாம் வீட்டில் அனைத்து கிரகங்களும் பிரவேசிப்பதால் குற்றமில்லை.
சூரியன் பெயர்ச்சி :
மிதுன ராசிக்கு மூன்றாம் அதிபதி சூரிய பகவான் ஏழாம் வீட்டில் தனுசு வீட்டில் பிரவேசிப்பதால் உங்களுக்கு புகழ் கூடும். உங்களின் வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். சூரியன் வெற்றிக்கு அதிபதி ஏழாம் வீட்டில் பிரவேசிப்பதால், அனைத்திலும் வெற்றி அடையப் போகிறீர்கள்.
ஒளி கிரகமான சூரியன் ஏழாம் வீட்டில் பிரவேசித்து உங்கள் ராசிக்கு ஒளியை கொண்டு வரப் போகிறார் ராகு பகவான் மீன ராசியில் அமர்ந்து உங்களின் பத்தாம் பாவத்தை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு பக்கம் சூரியனும் குருவின் வீட்டில் பிரவேசிக்கும் போது நிச்சயமாக ஒரு பெரிய மாற்றம் உண்டாகும்.
சுக்கிரன் பெயர்ச்சி :
சுக்கிரன் மிதுன ராசிக்கு ஐந்தாம் அதிபதியும் 12ம் அதிபதியும் ஆகி, ராசிக்கு ஆறாம் இடத்தில் பிரவேசிக்கிறார். மிதுன ராசிக்கு ஆறாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பது நிச்சயமாக பெரிய வெற்றியை தேடி தரும். செவ்வாய் பகவான் வீட்டில் சுக்கிரன் பிரவேசிப்பதும் ஒரு நன்மையே. சுக்கிரன் எந்த பாவத்தில் அமர்ந்தாலும், அந்த பாவத்துக்கு உண்டான பணக்காரகத்துவங்களை அதிகப்படுத்துவார்.
செவ்வாய் பெயர்ச்சி :
செவ்வாய் பகவான் தனுசு ராசிக்குள் நுழைகிறார். அது மிதுனத்திற்கு ஏழாம் பாவமாக வருவதால், தடைப்பட்ட திருமண காரியங்கள் கைகூடும் புத்திர பாக்கியம் கிடைக்கும். நிலம், வீடு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கல்களை நீங்கள் சந்தித்து இருந்தாலும், அந்த சிக்கல்களை அந்த ராசியின் லாவாதிபதியே தீர்த்து வைப்பார்.
அந்த வகையில் மிதுன ராசிக்கு ஆபாதிபதியான செவ்வாய் பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் நிலம் வீடு தொடர்பான வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் வம்பு வழக்கு என்று அனைத்து விதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கப் போகிறார்.
உங்களுக்கு ஆறாம் அதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணையின் நோய் தீர போகிறது. நீண்ட தூர பிரயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கி கொடுப்பார். வருகின்ற டிசம்பர் மாதம் 5 கிரக பெயர்ச்சி மிதுன ராசிக்கு சாதகமாக அமைகிறது.
புதன் வக்ர நிலையில் விருட்சகத்தில் :
புதன் பகவான் உங்களுக்கு டிசம்பர் 28ஆம் தேதி வக்ரநிலையில் விருச்சகத்தில் நுழைகிறார். லக்னாதிபதி வக்ர நிலையில் ஆறாம் பாவத்தில் வீற்று இருப்பது மலையளவு கடன் இருந்தாலும் கடுகளவு குறைந்து போகும். நோய்கள் தீரக்கூடிய காலம். 10 வருடமாக ஒரு நோய் உடலில் தங்கி இருக்கிறது அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று காத்திருப்போர், புதனின் விருச்சக பெயர்ச்சியால் அந்த நோய்க்கான தீர்வு கிடைத்து உங்களுக்கு நோய் விரைவில் குணமாகும்.
புதியதாக வாகனம் வாங்க வேண்டும் என்று காத்திருந்தோர் டிசம்பர் மாதத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். ரத்தத்தில் இந்த ஐந்து கிரக பெயர்ச்சி மிதுன ராசிக்கு சாதகமாக அமைகிறது. நான்காம் வீட்டில் வீட்டிற்கும் கேது பகவானால் சிறு, சிறு உடல் உபாதைகள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கூட மற்ற கிரக பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.