சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகைகளுள் ஒருவர் நடிகை ரேஷ்மா. 10 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் ரேஷ்மாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அங்கீகாரத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொடுத்தது. முன்னதாக வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், திரைக்கு வராத கதை , கோ 2  உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, கிளாமரான புகைப்படங்களை அவ்வபோது பதிவிடுவது வழக்கம். அதே போல சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸிலும் கிளாமராக நடித்திருந்தார். அது குறித்தும் , தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ரேஷ்மா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.







அதில் “உங்களை பொருத்தவரையில்தான் அது கிளாமர். என்னை பொருத்தவரையில் இது சாதாரண ஆடைதான். நான் அமெரிக்காவில்தான் வளர்ந்தேன். என் வாழ்க்கையில் பாதி நேரத்தை அமெரிக்காவில்தான் கழித்திருக்கிறேன். எனக்கு அப்படியான ஆடைகள் சாதாரணம்தான். நான் அங்கிருந்து வந்து இதுபோன்ற ஆடைகள் அணிந்தால் கிளாமர்னு சொல்லுறாங்க. ஆனால் இங்கே இருக்கவங்களே அப்படித்தான் ஆடை உடுத்துறாங்க. அவங்க அவங்க உடல் , அவங்களுடைய விருப்பம். அவங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை பண்ணிட்டு போக வேண்டியதுதான். என்னை பொருத்தவரையில் நெகட்டிவிட்டி , பாஸிட்டிவிட்டி அப்படினு எதுமே இல்லை. எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்குவேன். விலங்கு படத்துல நடிச்சதுக்கு எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு மகிழ்ச்சி. இந்த கேரக்டருக்கு கிராமத்து லுக் இருக்கனும்னு சொன்னாங்க.





ஒரு மகிழ்ச்சி இல்லாத திருமண வாழ்க்கை, அவங்களுக்கு பிடிச்சது கிடைக்காம நிறைய பெண்கள் இப்படி ஆயிட்றாங்க. அப்படியான கேரக்டர்தான் எனக்கு. அது நெகட்டிவ் ஷேட் கிடையாது . அது சூழ்நிலைனுதான் நான் சொல்லுவேன். நான் நிறைய கேரக்டர் ரோல்ல நடிச்சிருக்கேன் . எனக்கு கிளாமர் ரோல் , அக்கா ரோல் , பிச்சைக்காரன் ரோல்னெல்லாம் கிடையாது. எனக்கு எந்த ரோலாக இருந்தாலும் நான் நடிப்பேன். நடிக்கத்தானே நாம இவ்வளவு பேஷனோட போராடுறோம். ” என வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரேஷ்மா.