நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து அண்மையில் The Girlfriend திரைப்படம் வெளியானது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா மாதவிடாய் பற்றி பேசினார். அப்போது ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தான் அவர்களுக்கு அந்த வலி புரியும் என ராஷ்மிகா கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து சமூக வலைதளத்தில் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ராஷ்மிகாவின் கருத்து ஆண்களின் உணர்வுகளை புண்படுத்தும்படி இருப்பதாக பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்
இந்திய வனிக சினிமாவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருகிறார். சாவா , சிகந்தர் , குபேரா , தம்மா , த கெர்ள்ஃப்ரண்ட் என இந்த ஆண்டு ராஷ்மிகா நடித்து ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் , தெலுங்கு , இந்தி , என மூன்று மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். நீண்ட நாள் காதல் ஜோடியான இந்த தம்பதிக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா சர்ச்சை கருத்து
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா மந்தனா " மாதவிடாய் வலி என்பது என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஆண்களுக்கு ஒரு முறையாவது மாதவிடாய் ஏற்பட வேண்டும். அந்த நேரத்தில் நான் சந்திக்க கூடிய வலியை உணராத ஒருவரிடம் நான் எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும் அது பயனற்றது. அதனால் எல்லா ஆண்களுக்கும் ஒருமுறையாவது வாழ்க்கையில் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்பது என் விருப்பம். எனக்கு ஒவ்வொரு முறை மாதவிடாய் ஏற்படும் போதும் அதன் வழி என்னால் தாங்கிக்கொள்ள முடியாதது. நான் எல்லா மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன். எல்லா ஸ்கேனும் எடுத்துவிட்டேன். என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. சில சமயம் கடவுளிடம் ஏன் இப்படி ஒரு பிறவி என்று கேட்டுக்கொள்வேன்" என ராஷ்மிகா மந்தனா கூறினார். அவர் பேசியதில் ஒருபகுதி வீடியோ மட்டும் இணையத்தில் வைரலாகவே ராஷ்மிகாவை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினார்கள்.
ராஷ்மிகா விளக்கம்
இதன் பின் ராஷ்மிகாவுக்கு ஆதரவான ரசிகர்கள் முழு வீடியோவையும் சமூக வளத்தில் பதிவிட்டு அவர் சொன்ன வந்த அர்த்தத்தை விளக்கினார்கள். இதனால் தான் நான் நேர்காணல்களுக்கு பேச பயப்படுகிறேன். நான் ஒரு அர்த்தத்தில் சொல்வேன் அதை வேறு விதமாக எடுத்துக்கொள்வார்கள் " ரசிகர் ஒருவரின் பதிவில் ராஷ்மிகா கமெண்ட் செய்துள்ளார்