மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
14.11.2025- தேதி வெள்ளிக்கிழமை அன்று சமயநல்லுார் கோட்டத்திற்குட்பட்ட 110/33-11KV மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
 
மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 
உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி. கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

Continues below advertisement

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.