உலகின் சொகுசு கார்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டெஸ்லா. சமீபத்தில் ட்விட்டர் வாங்கி, உலகத்தையே அப்டேட் மூலம் அதிர வைத்துக் கொண்டிருக்கும் எலன் மாஸக்கின் நிறுவனம் தான் டெஸ்லா. இன்னும் சொல்லப்போனால், உலகப் பணக்காரர் வரிசையில் அவரை அமர வைத்து அழகு பார்த்ததில் டெஸ்லாவிற்கு பெரும் பங்கு உண்டு.




தானியங்கி கார், எலெக்ட்ரிக் கார் என கார் தயாரிப்பில் எங்கேயோ போய் விட்டார் எலன் மாஸ்க். அவரது தயாரிப்புகள் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் டெஸ்லா எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பும் அடிக்கடி எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. வரி பிரச்னைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, எலன் மாஸ்க்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அந்த அளவிற்கு ஏன், டெஸ்லா காரை எதிர்நோக்குகின்றனர் என்றால், அதன் பாதுகாப்பு தான் காரணம் என்கிறார்கள். விபத்தில்லா போக்குவரத்து என்பதை மையமாக வைத்து தான் டெஸ்லா கார்கள் உருவாக்கப்படுகின்றன. என்ன தான் தொழில்நுட்பங்கள் சரிவர உதவினாலும், போக்குவரத்து எனும் போது, நாம் சரியாக சென்றாலும், எதிரில் வருபவரும் சரிவர வந்தால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். 






அந்த வகையில் டெஸ்லா கார்கள் அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வந்தன. அதனால் விமர்சனங்களும் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தான். கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா, பள்ளி முடித்து தன் குழந்தைகளை அழைத்து வர டெஸ்லா காரில் சென்றுள்ளார். குழந்தைகளை அவர் அழைத்து வந்த கொண்டிருந்த போது, மற்றொரு கார், ரம்பாவின் கார் மீது மோதியது. இதில், ரம்பாவின் கார் சேதமடைந்தது. 


ரம்பா அவரின் மூன்று குழந்தைகள் மற்றும் குழந்தை காப்பாளர் பெண்மணி ஒருவரும் காயம் அடைந்த நிலையில் , கதவு ஓரத்தில் அமர்ந்திருந்த அவரது இளம் மகள் சாஷா படுகாயம் அடைந்தார். நிறைய பாதுகாப்பு அம்சங்களை கொண்ட டெஸ்லா காரில் விபத்து ஏற்பட்டு, முன்னணி நடிகையின் குழந்தை படுகாயம் அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தனது கார் மீது மற்றொரு கார் நேருக்கு நேர் மோதியதாக மட்டும் ரம்பா கூறியிருக்கும் நிலையில் விபத்திற்கான பிற காரணங்கள் இன்னும் சரிவர தெரியவரவில்லை. அதன் பிறகே ஏன் விபத்து நடந்தது, யார் மீது தவறு உள்ளது என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும். இதுஒருபுறம் இருக்க, நடிகை ரம்பா பயன்படுத்தி வரும் டெஸ்லா எஸ் மாடல் கார், 1 கோடி ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் விலை கொண்டது என கூறப்படுகிறது. 


மேலும் தொடர்புடைய செய்திகள் இதோ...


நடிகை ரம்பா வந்த கார் பயங்கர விபத்து... தீவிர சிகிச்சையில் குடும்பம்!


குழந்தையுடன் பாடி மகிழ்ந்த ரம்பா வீடியோ... 24 மணி நேரத்திற்குள் நடந்த விபத்து...!