ரக்‌ஷிதா மகால‌ஷ்மி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தவர். தமிழில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர். அவர் முதன்முதலாக தமிழ் சீரியல் உலகில் நுழைந்தது ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலமாகத்தான். பள பள ஸ்கின், அடர்த்தியான கூந்தல், முகத்தில் தீராத புன்னகை, ஃபிட்டான உடல் என பார்க்கும் யாருக்கும் இவரை மிகப் பிடிக்கும்.

 


 


சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில்  மதுரையில் நடைபெற்ற  முடி பராமரிப்பு நிறுவன தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலம் ரக்ஷிதாவை பார்க்கவந்த ரசிகர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



மதுரை அண்ணாநகர் பகுதிகளில் பிரபலமான நகைகடைகள் முதல் ஜவுளி கடைகள், வங்கிகள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவு விடுதிகள் இருப்பதால் அந்த பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு முடிபராமரிப்பு நிறுவனத்தின் சார்பில் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலமும் திரைப்பட நடிகையுமான  ரக்ஷிதா மகாலெட்சுமி கலந்துகொண்டார். இதற்காக தனியார் நிறுவனத்தின் முன்பாக தற்காலிக மேடை அமைக்கப்பட்டு அதில் திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. முன்னதாக நடிகை ரக்ஷிதாவை வரவேற்பதற்காக மாலை 6 மணி முதல்  செண்டை மேள குழுவினர் மூலமாக தாளங்கள் இசைக்கப்பட்டு கொண்டே இருந்தது.  இதேபோன்று நடிகை ரக்ஷிதாவை பார்க்க வந்த ஒரு 4 ரசிகைகளோ  கைகளில் பூக்களோடு காத்துகொண்டே இருந்தனர்.



 

சாலையில் எந்த வாகனம் ஹார்ன் அடித்தாலும் ரக்ஷிதா வந்துவிட்டார் என அடிக்கடி எட்டி எட்டி பார்த்து வெறுத்துபோய் நிற்க திடீரென ரக்ஷிதா ஒரு காரில் கண்டுகொள்ளாமலே நின்றுகொண்டிருந்தனர். இதனையடுத்து நடிகை ரக்சிதா வந்ததை பார்த்த பின்னர் அவரே என்னையா இப்படி எதிர்பார்த்துகிட்டு இருக்கங்க என்ற நினைக்கும் அளவிற்கு தலை முதல் பாதம் வரை பூக்களை வாரி இரைத்தனர் ரசிகைகள் சிலர்.

 

பின்னர்  ரக்ஷிதாவை பார்க்க வந்த 10 ரசிகர்களிடம் இருந்து நெரிசல் இல்லாமல் அழைத்துசெல்ல நியமிக்கப்பட்ட 10 தனியார் பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்துசென்றார். இதனையடுத்து மேடையில் ரசிக்கும் வகையில் ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி என்றதோடு முடித்துக் கொண்டு வந்த நிறுவனத்திற்காக விளம்பரம் செய்து கொண்டே இருந்ததால்  வெறுத்துப் போன ரசிகைகள் ஏதாவது பேசுங்கள் என கூற அதை சற்றும் கண்டு கொள்ளாமல் இருக்கையில் அமர்ந்து விட்டார். கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா நகர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரக்ஷிதாவை அந்த வழியாக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளும் பயணிகளும் பார்த்தபடியே சென்றதால் வாகன நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.



 

மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசை வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரக்ஷிதாவை பார்த்த ரசிகர்கள் நடு ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்போனில் படம் எடுத்துக் கொண்டே இருந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணி புரியும் பெண்களோ தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்லாமல் ரக்ஷிதாவை பார்த்தபடி இருந்தனர். பின்னர் மேடையில் இருந்து இறங்கிய பொழுது அவருக்காக காத்திருந்து கத்திக் கொண்டே இருந்த சில ரசிகைகளை கட்டிப்பிடித்து செல்பி எடுக்க காவலர்களும் போதும் போதும் வாங்க கடையை திறந்து வைங்க என அழைத்துச் சென்றனர். பின்னர் நிறுவனத்தை திறந்துவைத்தார்.   இந்நிலையில் நடிகை ரக்‌ஷிதா இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்தார்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண