தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
கோலிவுட் சினிமாவில் தனுஷ் முதன்முறையாக பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள நிலையில், சென்ற வாரம் இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்தது.
முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வாத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது.
தனியார்மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை துணிச்சலுடன் பேசும் ஆசிரியராக தனுஷ் ட்ரெய்லரில் தோன்றி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
இந்நிலையில், வாத்தி படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஆடியன்ஸ் சொல்வது என்ன? வாத்தி ரசிகர்களைக் கவர்ந்தாரா எனப் பார்க்கலாம்.