பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவாக பிரபல நடிகை ராக்கி சாவந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்பீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனில் வெளிப்படுத்தும் எப்போதும் இளமை துள்ளும் எனர்ஜியால் நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். உடை அலங்காரம், ஆஃப் ஸ்க்ரீன், சினிமா நிகழ்ச்சிகள், மேன் vs வைல்ட் என அவரின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
இதே ரன்வீர் தான் கடந்த வாரம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆக மாறினார். 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
பிரபல பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதில் ஒருபடி மேலேபோய் ரன்வீருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தும் இணைந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் ரன்வீர், என் அன்பு நண்பரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். இதுபோன்ற போட்டோஷூட்களை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உன்னை இப்படி மட்டுமே பார்க்க விரும்புகிறேன். நிர்வாணமாக போஸ் கொடுத்ததன் மூலம் கண்கள் மற்றும் இதயத்தில் ஒரு அமைதி ஏற்படுவதாகவும் ராக்கி சாவந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்