தான் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நடிகையும், மருத்துவருமான ரேச்சல் ரெபேக்கா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதை காணலாம். 


கடைசி விவசாயி, குட் நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளா ஆயுர்வேத மருத்துவரான ரேச்சல் ரெபேக்கா பேசுகையில், எனக்கு சொந்த ஊர் வேலூர் ஆகும். சிறு வயதில் இருந்தே எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என் பெற்றோர்கள் ஆயுர்வேத, சித்த  மருத்துவர்களிடம் தான் அழைத்து செல்வார்கள். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போதே முடிவு செய்து விட்டேன். என்னுடைய எதிர்காலம் சித்தா அல்லது ஆயுர்வேதம் மருத்துவம் சார்ந்து தான் இருக்க வேண்டும்.


2008 ஆம் ஆண்டு எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு அப்போது 19 வயதாகி இருந்தது. வேலூரில் ஒரு பையன் என்னை காதலிப்பதாக சொல்லி பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு 3, 4 வருடமாக சகித்துக் கொள்ளவே முடியாத அளவுக்கு பிரச்சினை எல்லாம் பண்ணியிருக்கான். பொறுக்க முடியாமல் நான் என் பெற்றோரிடம் சொல்லியிருக்கேன். அவர்கள் என்னிடம் நண்பர்கள் போல பழகியதால் சொல்ல முடிந்தது. 


அந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி காலையில் வீட்டில் இருந்தேன். அம்மா கடைக்கு சென்றிருந்தார். காலை 9.30 மணியளவில் யாரோ வந்து கதவை தட்டினார்கள். திறந்து பார்த்தால் இந்த பையன் நின்று கொண்டிருந்தார். என்னுடைய கையில் என் சித்தப்பா அமெரிக்காவில் இருந்து வாங்கிக் கொடுத்த புது மொபைல் இருந்தது. கதவை திறந்ததும் என் கையில் இருந்த போனை பிடுங்கி விட்டு இது வேண்டுமென்றால் என்னை வெளியே வந்து மீட் பண்ணு என சொல்லி விட்டு அவன் சென்று விட்டான். 


நான் செத்து போயிடலாம் என நினைத்தேன். படிக்கும் விஷயத்துக்காக வீட்டில் சோதனை செய்ய பொருட்கள் வாங்கி வைத்திருப்பேன். அதில் குன்றிமணி இருந்தது. அது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. அரைச்சி கையில் வைத்து சாவலாம் என நினைக்கும்போது சாமி கும்பிட்டு சாகலாம் என நினைத்து ஜெபம் செய்துக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு ஆளுயர கண்ணாடி இருக்கும். 


அதில் நின்று எனக்கு நானே பேசிக் கொண்டேன். என்ன பிரச்சினை என கேட்டுக் கொண்டேன். அப்பா வந்ததும் விஷயத்தை சொல்லி விட்டு வெளியே சென்றார். நானும் அம்மாவும் வீட்டில் இருந்த நிலையில் மீண்டும் அவன் வந்தான். அவரை தள்ளி விட்டு உள்ளே இருந்து கட்டிலில் வந்து உட்கார்ந்தான். அம்மா உடனே அப்பாவுக்கு கூப்பிட போனை எடுத்தால் அதை பிடுங்கி எறிந்தான். 


என் அருகே வந்து துருப்பிடித்த கத்தியால் தேவை இல்லாத வார்த்தைகள் பேசி தலையில் வெட்டினான். வெளியே ஓடி வந்து அம்மா உள்ளே இருக்கிறார் என்ற உணர்வில்லாமல் கதவை பூட்டி விட்டேன். சில நிமிடத்தில் கதவை திறந்தால் என்னை அடித்தான். கழுத்து எலும்பில் குத்தினான். என்னால் மூச்சு விட முடியவில்லை. திரும்பி வந்து வயிற்றில் குத்தினான். நான் வாழ வேண்டும் காப்பாத்துங்க என கதறினேன். 


மருத்துவர் உடனே பரிசோதனை செய்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல சொன்னார். கிட்டதட்ட 6 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. நான்கரை லிட்டர் இரத்தம் வெளியேறியது. நான் ஏப்ரல் 9 ஆம் தேதி கண் விழித்தேன். ரேச்சல்காக என்னை பார்க்க வந்த அனைவரும் இரத்தம் கொடுத்தார்கள். அங்கு தான் என்னுடைய கணவரை நான் சந்தித்தேன். எனக்கு இரத்தம் கொடுத்தவங்களை நினைத்து பார்த்தால் ஏதாவது சமூகத்துக்கு செய்ய வேண்டும் என நினைத்து ஊக்கம் பவுண்டேஷன் தொடங்கினேன். அந்த நிகழ்வு தான் எல்லாவற்றுக்கும் மாற்றமாக அமைந்ததாக நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.