சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (மே 24) எபிசோடில் காதுகுத்தில் பெரிய அளவில் பணம் மெய்யாக வரவில்லை. சில பங்காளிகள் வந்து "குணசேகரனுக்காக தான் நாங்க இங்க வந்தோம் அவரே வரவில்லை எனும் போது நாங்க எதுக்கு மொய் எழுத வேண்டும். அவர் தான் ஒன்னு நீங்க எல்லாரும் பூஜ்யம். ஒன்னு இல்லாமல் பூஜ்ஜியத்துக்கு எந்த மதிப்பும் இல்லை" என அவமானப்படுத்தி பேச கோபத்தில் அனைத்தையும் தூக்கி விசிறி எறிந்து "இதெல்லாம் தேவையா? இருந்த கொஞ்ச மானமும் போயிருச்சு. எல்லாம் இவளையும் இவ அப்பனையும் சொல்லணும்" என நந்தினியையும், அவளுடைய அப்பாவையும் பயங்கரமாக திட்டுகிறான் கதிர்.
ஈஸ்வரி, ரேணுகா என அனைவரும் கதிரை சமாதானப்படுத்தி "அவங்க எல்லாரும் செய்யலைன்னா என்ன? நாங்க எல்லாரும் இல்லையா? நாங்க இருக்கோம்" என சொல்லி ஈஸ்வரி கம்மலை கழட்டி போட, தர்ஷினி வளையலை கழட்டி போடுகிறாள். ரேணுகா மொய்க்காக கொண்டு வந்த சங்கிலியை போடுகிறாள். ஞானம் பிரெண்ட் ஒருவரின் மூலம் பணம் ஏற்பாடு செய்து எடுத்து வந்து கொடுக்கிறான். ஈஸ்வரியின் அப்பாவும், நந்தினியின் அப்பாவும் அவர்களால் முடிந்ததை கொடுக்கிறார்கள். "உங்களுக்கு ஏதாவது ஒன்னு என்றால் நாங்க இருக்கோம். எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தா நீங்க வரமாட்டீங்களா" என அனைவரும் நந்தினியின் தொழில் நன்றாக வரும் என வாழ்த்துகிறார்கள்.
"நந்தினி நீங்க மூன்று பெரும் எனக்கு போதும். வேற யாரும் தேவையில்லை" என்கிறாள். இங்கு நடந்த அனைத்தையும் பார்த்து கொந்தளித்த குணசேகரன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். வீட்டுக்கு வந்ததும் விசாலாட்சி அம்மா யாரும் இல்லாத நேரமாக பார்த்து தாராவை ஆசீர்வாதம் செய்து பணம் கொடுக்கிறார். அதை பார்த்துவிட்ட நந்தினி "ஏன் அவர் இருக்கும் போது ஒரு மாதிரி இருக்கீங்க, அவர் இல்லாத போது வேற மாதிரி இருக்கீங்க. எப்பவும் ஒரே மாதிரி பெரிய மனுஷியா நடந்துக்கோங்க" என குணசேர்க்கன் கோயிலில் செய்த அசிங்கத்தை பற்றி சொல்லி வருத்தப்படுகிறாள்.
அந்த நேரம் குணசேகரன் வீட்டுக்கு வந்து விசாலாட்சி அம்மாவை திட்டுகிறார். "என்னை அசிங்க படுத்துன அவங்களோட சேர்ந்துக்கிட்டியா" என கேட்கிறார். "யார் யாரை அசிங்கப்படுத்தினது? நாங்களா இல்லை நீங்களா? " என ரேணுகா கேட்டு சரியான பதிலடி கொடுக்கிறாள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நந்தினி தாராவிடம் "ஏதாவது கொடுத்தாங்க வாங்கிடாத. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது" என சொல்லி விட்டு செல்கிறாள். அன்று இரவு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் "பெயர் வைக்கப் போறோம். பாப்புலரா விளம்பரம் பண்ண போறோம்" என ஜனனி சொல்கிறாள். அதை கேட்ட கதிர் "ஏற்கனவே அந்த ஆளு தையா தக்கா என குதித்துக்கொண்டு இருக்குறாரு. இதெல்லாம் தெரிஞ்சதுனா அவ்வளவு தான்" என்கிறான். அவன் அப்படி பேசியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அடுத்த நாள் காலை ஞானத்தை தேடி பணம் கொடுத்த பிரெண்ட் வீட்டுக்கு வருகிறான். "அவசர தேவைக்காக பணம் கேட்ட அதுக்கு அப்புறம் போனையும் காணும், பணத்தையும் திருப்பி தரல. அது தான் கேட்டுட்டு போகலாம் என வந்தேன்" என்கிறான். அதை கேட்டு அனைவரும் ஷாக்காகி நிற்கிறார்கள். என்ன சொல்வதென புரியாமல் ஞானம் தலைகுனிந்து நிற்கிறான். இது அனைத்தையும் குணசேகரன் கேட்டு கொண்டு இருக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.