நடிகை ராதிகா அப்தே தென் இந்திய சினிமாத் துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பல்வேறு முறை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தான் நடித்த படம் ஒன்றில் தனது பார்பகத்தை பெரிதாக காட்ட பேடிங் பண்ண சொல்லி படக்குழு வலியுறுத்தியதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தமிழ் அல்லது தெலுங்கு படத்தை குறிப்பிட்டாரா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது
ராதிகா ஆப்தே
2005ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வாஹ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன் பின்னர், 2012ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான தோனிதிரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்ததன் மூலம் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ், இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தென் இந்திய சினிமா பற்றி குற்றச்சாட்டு
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியபோது ராதிகா ஆப்தே தென் இந்திய படங்களைப் பற்றியும் அவற்றில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். " தென் இந்திய சினிமாத் துறை மிகச்சிறந்த படங்களை கொடுத்து வருகின்றன. ஆனால் நான் நடித்த தென் இந்திய படத்தில் ஒட்டுமொத்த செட்டில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண். நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் படப்பிடிப்பில் இருந்தோம் என்னுடன் வேறு யாரும் இல்லை எனக்கான ஒரு குழுவை அமைத்து தர அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதில்லாமல் என்னிடம் வந்து எனது மார்பகங்களை பெரிதாக காட்ட பேடிங்க் செய்ய சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்." என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
அவர் தென் இந்திய படங்கள் என்று குறிப்பிட்டிருப்பதால் அவர் தமிழில் நடித்த படத்தை குறிப்பிடுகிறாரா அல்லது தெலுங்கில் பாலையாவுடன் நடித்த படத்தைப் பற்றி குறிப்பிடுகிறாரா என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.