திருத்தமான முக அழகு கொண்ட ரச்சிதா தமிழ் சீரியல் உலகில் டாப் ரேட்டட் நடிகை. அவருக்கு ரசிகர்கள் ஏராளம். சின்னத்திரையில் மவுசும் ஏராளம். அதனாலேயே இவர் நடிக்கும் சீரியல்கள் களை கட்டும். சமீப காலமாக அவர், நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் நடித்து வந்தார். அந்தப் நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார். பின்னர் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை நாடகத்தில் நடித்தார். தற்போது மாடர்ன் உடையில் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ரச்சிதா. அவர் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் தங்க மீனாட்சியாக வலம் வந்தவர் தான் ரச்சிதா. கிராமத்துக் கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் வாயிலாக மக்கள் அனைவரின் நெஞ்சில் இடம் பெற்றுள்ளார் ரச்சிதா. முன்னதாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த நிலையில், சின்னத்திரை கதாநாயகன் தினேஷ்கும், ரக்சிதாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரச்சிதாவிற்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேசும் திருமண கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.


இந்த சமயத்தில் தான் சரவணன் மீனாட்சி சீரியலில் கமிட் ஆனதோடு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார். சீரியலில் ஹிட் அடித்ததோடு காதலித்தவரை கரம் பிடித்த நிலையில் இவரது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக நகர்ந்துகொண்டிருந்தது. இதோடு திருமணமான சமயத்தில், தமிழகத்தின் மருமகளாகி விட்டேன் எனவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இப்படி இருவரும் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்க்கையை நடத்தி நிலையில் தான், ஜீ தமிழின் நாச்சியார்புரம் சீரியலில் இருவரும் இணைத்து நடித்து வந்தனர். இப்படி சின்னத்திரை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்த ரச்சிதா- தினேஷ் ஜோடி பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துவந்த ரச்சிதா மகாலட்சுமி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.






வெயிட் லாஸ் மந்திரம்:



ரச்சிதா ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை தனது உடல் எடையை மெய்ன்டெய்ன் செய்து வருகிறார். அது குறித்து அவர் அளித்த பேட்டியில், "வெயிட் லாஸ் மந்திரம். சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள், யோகா செய்யுங்கள், வீட்டு உணவையே உண்ணுங்கள், அளவாக சாப்பிடுங்கள், இரவு சீக்கிரம் உணவை அருந்துங்கள், நன்றாக ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள் வெயிட் தானாக மெயின்டெய்ன் ஆகும். இதையெல்லாம் தினமும் செய்ய நேரமேது எனக் கேட்பார்கள். இது உழைப்பதற்கான காலம். இப்போது உழைப்பது மட்டுமே நன்மை தரும். ஓய்வுக்கான காலம் வரும். அது வரை உழைத்துக் கொண்டும் உடலை உறுதியாக்கிக் கொள்ளவும்" என்று கூறியிருந்தார்.