தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருக்கும் பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியினர் இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிகழ்வை பற்றி காணலாம். 


இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பூர்ணிமா, "சினிமாவுல பாக்யராஜோட மனைவி பிரவீனா அக்காதான் எனக்கு நல்ல தோழியா இருந்தாங்க. ஆனால் உடல் நலக்குறைவால் அவங்க இறந்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதன்பிறகு பாரிஸில் நடக்கவிருந்த ஒரு படத்தோட ஷூட்டிங்குக்கு போகும் முன் மும்பையில இருக்கிற எங்க வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது பாக்யராஜ் மும்பையில் இருக்கிறதை தெரிந்ததும் வீட்டுக்கு அழைத்தேன். வரமாட்டார் என நினைத்த நேரத்தில் வந்தார். அது நவராத்திரி நேரம் என்பதால் வீட்டின் அருகில் எல்லோரும் டான்ஸ் ஆடி கொண்டாடி கொண்டு இருந்தார்கள். 


வீட்டு பால்கனியில நின்னு நான் அதை பார்த்து பாக்யராஜிடம் விளக்கமளித்து கொண்டிருந்தேன்.  அப்போது தான் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என அவருக்கு தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். பின்னர் பாரிஸ் போய்ட்டு  இந்தியா வந்தபிறகு ஒருநாள் என்னை வந்து பார்த்தார். என் அம்மா எப்பவுமே என்கூடதான் ஷூட்டிங் வருவாங்க. அன்னைக்கு பாக்யராஜ், என்னிடம் அம்மா வேற காரில் வரட்டும். நீ என்னுடன் வா என காரில் கூட்டிச் சென்றார். 


அப்போது,  'கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு நேரடியா கேட்டார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில எம்.ஜி.ஆர்., அப்போதைய கர்நாடகா முதல்வர் ஹெக்டே, ஆந்திர முதல்வர் என்.டி.ஆர்., என 3 பேரும் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியிருந்தாங்க. பாக்யராஜ் என்னிடம் அப்படி கேட்டதும் அப்பா அம்மாட்ட கேளுங்கன்னு சொன்னேன். அவங்களும் உனக்குப் புடிச்சிருந்தா எங்களுக்கு ஓகேன்னு சொல்லிட்டாங்க.


அந்நேரம் நான் பிஸியான நடிகை. 2 வருஷத்துக்கு கிட்டதட்ட 25 படத்துல கமிட் ஆகிருந்தேன். அதனால் 2 வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணிக்கலாம் என சொன்னேன். ஆனால் ஜோசியம் பார்த்தவர்கள் 'ஆறு மாசத்துல கல்யாணம் பண்ண வேண்டும்’ என சொல்லி விட்டார்கள். இதனால் உடனடியாகவே எங்க திருமணம் நடைபெற்றது. சிவாஜி சாரும் எம்.ஜி.ஆர் தான் முன்னாடி நின்று நடத்தி வைத்தார்கள். எம்.ஜி.ஆர் எங்க குடும்பத்து மேல மிகுந்த பாசமாக இருப்பார். அவர் இல்லாதது எங்க ரெண்டு பேருக்குமே பெரிய இழப்பு. 


திருமணம் ஆகி நாற்பது வருஷம் ஆன நிலையில் காலம் ஓடியதே தெரியவில்லை. நாங்கள் திருமணம் செய்த பிறகு தான் நாங்க நன்றாகவே காதலிக்க தொடங்கினோம்” என அதில் பூர்ணிமா தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Poornima Bhagyaraj: ஓடி சென்று வாழ்த்திய பூர்ணிமா... கண்டு கொள்ளாமல் சென்ற பாக்யராஜ்.. என்ன காரணம் தெரியுமா?