நவரத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருபுறம் கொண்டாட்டம் என்றாலும் அம்மன் இவ்வுலகில் எல்லாமுமாக விளங்குவதாக நம்பபடுவதால் விரதம் இருந்து சிறப்பு பூஜை என வழிபாடு செய்வதும் வழக்கம். விரத காலங்களில் உணவுகள் என தனியே சிலவற்றை நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.
நவராத்திரி விரதம்
நவரத்திரி நாட்களில் விரதம் இருப்பது அம்மனை வழிபட்டால் வளமான வாழ்க்கை கிடைக்கும் என நம்பப்படுகிறது. நினைத்த காரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு வேளை மட்டும் சாப்பிடும் விரத முறையும் உண்டு. வீட்டில் கொலு வைத்திருப்பதால் மூன்று வேளை சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு பூஜை செய்ததும் பழங்கள் போன்ற உணவுகளை சாப்பிடலாம். மாலையில் அம்மனுக்கு படைக்க செய்யப்படும் உணவையே இரவு சாப்பிட்டுவிட்டு விரதத்தை முடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் பால், மோர், பழங்கள் போன்றவற்றை உணவாக சாப்பிடலாம். திட உணவு வேண்டுமென்றால் சத்துமாவு கஞ்சி சாப்பிடலாம்.
பண்டிகை என்றாலே உணவும் அதை பகிர்ந்து உண்ணுவதுதானே. பாசிப்பயறு சுண்டல், இனிப்பு போலி, கொண்டக்கடலை சுண்டல் மற்றும் ஜாங்கிரி, பாயசம், நவதானிய பாயசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் என்று தினம் செய்வது வழக்கம். வீட்டிற்கு வருபவர்களுக்கு பூஜை முடித்து நைவேத்தியமாக கொடுக்கலாம்.
விரத நாட்களில் சிலர் திட உணவுகள் ஏதும் சாப்பிடமாட்டார்கள். சில குறைந்த அளவிலேயே திட உணவுகளை சாப்பிடுவர். அப்படி விரதம் இருப்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமலும் புத்துணர்ச்சியுடன் வைத்துகொள்ள சில புத்துணர்ச்சி பானங்கள் எப்படி செய்வது என்று காணலாம்.
சாபுதானா தண்டை (Sabudana Thandai)
ஜவ்வரிசி தண்டை டிரிங்க் செய்வது சுலபம்தான். கடைகளில் Thandai Powder கிடைக்கும் இல்லையெனில் வீட்டிலேயே தயாரிக்கலாம். கரு மிளகு, ஏலக்காய், வெந்தயம், பூசணி விதை, குங்கும பூ, ரோஸ் இதழ்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை அரைத்து எடுத்தால் தண்டை டிரிங் செய்ய தேவையான பொடி தயார்.
நன்கு வேகவைத்த ஜவ்வரிசி, தண்டை பொடி, பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுத்தால் ரெடி. ஜில்லுன்னு நன்றாக இருக்கும். இதனுடன் ரோஸ் மில்க் எசன்ஸும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
இளநீர் - பேரிட்ச்சை ஸ்மூத்தி
பேரீட்சை, ஏலக்காய் சேர்த்து அரைத்து இளநீருடன் நன்றாக கலக்கவும். இதை ஜில்லென்றும் குடிக்கலாம். விரதகாலத்திற்கு ஏற்ற இயற்கை டிரிங்க்.
புதினா - வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதில் குறைந்த அளவு கலோரி. ஆனால் நிறைய சத்துள்ள ஜூஸ். வைட்டமின் சி, மேக்னீசியம், பொட்டாசியம் என எல்லாம் இருக்கிறது. வெள்ளரிக்காய் உடன் சிறிதளவு புதினா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ப்ளண்ட் செய்தால் புதினா வெள்ளரி கூலர் ரெடி.
கற்றாழை ஜூஸ்
கற்றாழையில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பது நாம் அறிந்ததே. இதோடு, அரை கப் எலுமிச்சை, தேன், வெல்லம் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம். கற்றாழையில் மிளகு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்தும் ஜூஸ் செய்யலாம். மோர் உடன் கற்றாழை, மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அடித்தும் கற்றாழை ஜூஸ் தயாரிக்கலாம்.
இஞ்சி லெமனேட்
வழக்கமாக செய்யும் எலுமிச்சை ஜூஸ் உடன் சிறு துண்டு இஞ்சி, உப்பு சேர்த்தால் ருசியாக இருக்கும்.
அன்னாசி ஜூஸ்
அன்னாசி துண்டுகளுடன் Basil இலைகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்தால் அன்னாசி பேசில் (Basil) ஜூஸ் ரெடி. இதோடு தேன், நாட்டுச் சக்கரை சேர்த்துகொள்வது நல்லது.
வாழைப்பழம் பாதம் ஸ்மூத்தி
வாழைப்பழத்துடன் பாதம், தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். விரத நாட்களில் இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
மாதுளை ஜூஸ்
மாதுளை உடன் Basil இலைகள், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து மாதுளை Basil கூலர் தயாரிக்கலாம்.
ரோஸ் மில்க் / பாதாம் மில்க்
ரோஸ் மில்க் எசன்ஸ், வீட்டிலேயே தயாரித்த பாதம் பவுடருடன் பால் சேர்த்தால் ரோஸ் மில்க் / பாதம் கீர் ரெடி. ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு ரோஸ் மில்க, பாதம் கீர் தயாரித்து குடிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட ஜூஸ் வகைகளோடு சோடா சேர்த்துகொள்ளலாம். இது நவராத்திரி விரத நாட்களில் மட்டுமல்ல.. மற்ற நாட்களிலும் டயட் பின்பற்றுபவர்கள் இதை வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம். உடல் எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்களும் இதை டயட்டில் சேர்க்கலாம்.
இந்த ஜூஸ்களை தயாரிக்கும்போது சப்ஜா, சியா விதைகளையும் சேர்த்து கொள்ளலாம். குறைவான கலோரியில் அதிக ஊட்டச்சத்து பெறும் உணவுகளாக ஊட்டச்சத்து நிபுணர்கள் இதை குறிப்பிடுகின்றனர். டய்ட் ரொட்டீன் காலங்களில் உணவுக்கு இடையே இந்த டிரிங்க் குடிக்கலாம்.