2004ஆம் ஆண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு என  தென்னிந்திய மொழிகளில்  கோலோச்சி வருபவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காசிம் எனும் இயற்பெயர் கொண்ட பூர்ணா, பரதநாட்டியம் கலையில் தேர்ந்தவர். சென்ற 2004ஆம் ஆண்டு ‘மஞ்சு போலோரி பெண்குட்டி’ எனும் மலையாளத் திரைப்படத்தில் பூர்ணா அறிமுகமானார்.

Continues below advertisement


தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான பூர்ணா, கந்தகோட்டை, சுதா கொங்கராவின் துரோகி, அர்ஜூனன் காதலி, ஆடு புலி ஆட்டம், சவரக்கத்தி என பல படங்களில் நடித்துள்ளார்.


தமிழில் இறுதியாக 2021ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்திருந்தார் பூர்ணா. தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பூர்ணா முன்னதாக துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.


எனினும் நடன நிகழ்ச்சிகள், இன்ஸ்டா என தற்போது படு ஆக்டிவாக இருக்கும் பூர்ணா தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.


அந்த வகையில் நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான தசரா படத்தில் முன்னதாக நடித்துள்ள பூர்ணா, அந்தப் படத்தின் பிரபல ஹிட் பாடலுக்கு நடனாடி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 


இதுபோன்ற சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உணர்கிறேன். தசரா படக்குழுவினர் உடனான அனைத்து ஜாலியான தருணங்களையும் மிஸ் செய்கிறேன். ஆனாலும் நான் கீர்த்தி குட்டிக்காக (கீர்த்தி சுரேஷ்) இதைச் செய்ய விரும்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.


 






தற்போது கருவுற்றிருக்கும் நடிகை பூர்ணா முன்னதாக ரமலான் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.