கடந்த 2009 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடித்த  ‘சேவல்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.  தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா, அரண்மனை-2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாரசிகர்களிடையே பிரபலமானார். ஆனால் இவரது நடிப்புக்கு இதுவரை சரியான கேரக்டர்கள் அமையவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பிருந்ததை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். 

அதில் “ எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருப்பதால் , 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பிரச்சினையில்லை. ஏனென்றால் இப்போது ட்ரெண்ட் மாறிவிட்டது.

எனது அம்மாவையும் சமதானம் செய்துவிட்டேன். நீங்கள் தொடர்ந்து கிளாமராக நடிக்கலாம்” என அந்த மெசேஜில் அந்த சிறுவன் குறிப்பிட்டு இருந்ததாக பூனம் பஜ்வா பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் இதுவரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோக்களில் நீச்சல் உடை போட்டோக்கள் தான் அதிகம். நான் எடுப்பவற்றில் எது அழகாக இருக்கிறதோ அதை பதிவிடுவேன்; அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை கிளாமர் என்பது உடலை மையப்படுத்திய விஷயமாக நினைக்கவில்லை. சினிமாவில் அப்படி காட்டப்படுகிறது. நான் நடித்த தமிழ் படங்களில் கேரக்டர்கள் அனைத்துமே குடும்ப கேரக்டர்கள் தான்.

என்னோட நடித்த நடிகர்களுடன் நான் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்வது இல்லை.” என்று பேசியுள்ளார்.