ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் ஆர்யாவின் ரைடர்ஸ் டீம் ஜாமி குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் வாழும், 10 ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில்  சைக்கிள் வழங்கியுள்ளது. 


ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்     “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்தின் பாட்ஷா போஸ்டர் பின்னணியில் இருக்க, கருப்பு வேட்டி சட்டையில், தாடியுடன் கரடுமுரடான கிராமத்து லுக்கில் இருந்தார் ஆர்யா. 





ஆர்யா பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக அதற்கு முந்தைய தினமான டிசம்பர் 10 ஆம் தேதி  காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.






மேலும் படக்குழுவினர், கிராமத்து மக்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் இணைந்து, ஆர்யா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய ஆர்யாவையும், படக்குழுவினரையும் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.




இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக நடந்து வருகிறது. இதுவரையிலும் மாடர்ன் இளைஞராக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ஆர்யா,  முதல் முறையாக இப்படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் படிக்க :Varisu Promotion: விக்ரம் பாணியில் வாரிசு.. மெட்ரோவில் விஜய் போட்டோ.. ப்ரோமோஷனில் மிரட்டும் லலித்!