இன்றைய வார தொடக்க நாளான இன்று, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 51.10 புள்ளிகள் சரிந்து 62,130.57 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 0.55 புள்ளிகள் சரிந்து 18,497.15 புள்ளிகளாக உள்ளது. 






லாபம் - நஷ்டம்:


தேசிய பங்கு சந்தையில் அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, கோடாக் மகேந்திரா, ஓஎன்ஜிசி, பவ்ர் கிரிட், எஸ்.பி.ஐ, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குக்கள் சரிவை கண்டன.


ஆக்சிஸ் வங்கி, பிரிட்டாணியா, கோல் இந்தியா, லார்சன், நெஸ்ட்லே, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 495.53 புள்ளிகள் சரிந்து 61,686.14 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 147.15 புள்ளிகள் சரிந்து 18,349.45 புள்ளிகளாக உள்ளது.






வட்டி விகிதம் உயர்வு:


இன்று ரிசிர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. 


இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.






அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 26 காசுகள் குறைந்து 82.54 ரூபாயாக ஆக உள்ளது. 


Also Read: TATA: ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் டாடா குழுமம்.. புதியதாக 100 கிளைகளை திறக்க முடிவு


Also Read:Gold, Silver Price Today: தங்கம் வாங்குற ப்ளான் இருக்கா? ஹேப்பி நியூஸ் மக்களே.. உடனே செக் பண்ணுங்க..