`மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் `பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள `டாக்டர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெகு மக்கள் ஆதரவோடு திரையிடப்பட்டு வருகிறது. `பீஸ்ட்’ படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பீஸ்ட் திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 


தமிழில் முகமூடி படத்தின் மூலம் முகம் காட்டிய நடிகை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் பூஜா. அதனால் பீஸ்டின் ரிலீசுக்கு பிறகு தமிழிலும் பூஜா ஒரு ரவுண்ட் வருவார் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பூஜாவின் சோஷியல் மீடியா நகர்வுகள் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் பூஜா விஷயத்தில் தீயாய் வேலை செய்கிறார்கள். சாதாரண ஒரு புகைப்படத்தையும் அவர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.


அந்த வகையில், பூஜா ஹெக்டே வெள்ளை நிற பூ டிசைன் போட்ட சேலை ஒன்றில் போட்டோஷூட் நடத்திய வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 


Sri Lanka Petrol Crisis: ‛சமாளிக்க முடியல... ஏதாவது பண்ணுங்க...’ இலங்கை போக்குவரத்து அமைச்சருக்கு ஸ்டேஷன் மாஸ்டர்கள் கோரிக்கை!






முன்னதாக, பூஜா ஹெக்டே சொகுசு படகு ஒன்றில் பின்னால் கடலின் அழகு தெரியும் வகையில் நடிகர் விஜய் ஆடும் ஸ்டெப்பை ஆடினார். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலானது. பூஜா சிறியதாக கொஞ்சம் கண் அசைத்தாலும் அதை படு பயங்கரமாக ட்ரெண்டாகி விடுகின்றனர் அவரது ரசிகர்கள். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண