Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?

பிரபல தொகுப்பாளர் பிரியங்காவிற்கு பிரபல நடிகை நிகிலா விமல் பல்பு கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

மலையாள திரையுலகின் பிரபல நடிகை நிகிலாவிமல். இவர் தமிழிலும் வெற்றிவேல், கிடாரி, வாழை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழ், மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றின் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த நிகிலா:

Continues below advertisement

அந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கினார். அப்போது, அவர் நடிகை நிகிலா விமல் மலையாளி என்பதால் அவரிடம் பிரியங்கா தனக்குத் தெரிந்த மலையாளத்தில் பேசினார். பிரியங்கா நங்களும் ஒரு ஆல் இண்டியா பெர்மிட் லாரியா. எவரிவேர் போயிட்டே இருக்கும். எங்கடே ந தக்லைஃப் என்றார்..

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிகிலா பிரியங்காவிடம், எனக்கு தமிழ் நல்லாவே தெரியும். நீங்க சொல்ற மலையாளம்தான் எனக்கும் புரியல என்றார். தக்லலைஃப் என்ற வார்த்தையில் கேள்வி கேட்ட பிரியங்காவிற்கு நிகிலா விமல் தக்லைஃப் கொடுத்ததாக ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

வறுத்தெடுக்கும் மணிமேகலை ரசிகர்கள்:

பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் மணிமேகலை வெளியேறியதற்கு பிரியங்காதான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாக மணிமேகலை ரசிகர்கள் பிரியங்காவை விமர்சித்து இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரரப்பான பிக்பாஸ் தொடரிலும் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு ஏற்றாற்போல தற்போது பிரியங்கா நடிகை நிகலாவிடம் பல்ப் வாங்கிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான நிகிலா தமிழில் பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், போர் தொழில் படங்களிலும் நடித்துள்ளார். வாழை படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் கதாபாத்திரமும், பஞ்சுமிட்டாய் சீலைகட்டி பாடலுக்கு அவரது நடனமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola