தமிழ்நாட்டில் புதிய Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலை


ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள Tata Motors நிறுவனத்தின், புதிய Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.  இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திமுக கூட்டணியில்தான் விசிக உள்ளது -திருமாவளவன் உறுதி


"டாஸ்மாக்கை மூடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வறுவதால் படிப்படியாகக் குறைத்திட வேண்டும். மது ஒழிப்புக்காக விசிகவுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். எப்படியாவது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடாதா? என சிலர் நினைக்கிறார்கள். தற்போது வரையில் திமுக கூட்டணியில்தான் விசிக உள்ளது - திருமாவளவன்


"ராமதாஸ் எண்ணமும், திருமாவளவன் எண்ணமும் ஒன்றுதான்"


45 ஆண்டுகாலமாக மதுவை ஒழிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். மது ஒழிப்புக்காக அனைத்து கட்சிகளுக்கும் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் அடிப்படை காரணமே பாமகதான். பாமக, விசிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். ஒன்று சேர வேண்டும் -அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்


விநாயகர் சிலை ஊர்வலத்தில் அத்துமீறல்


சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை வழியாக நேற்று விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு ஊர்வலமாக கொண்டு சென்றமாது போலீசார் அனுமதிக்கப்பட வழியில் செல்லாமல், அப்பகுதியில் உள்ள பெரிய மசூதி தெரு வழியாக செல்ல முற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் 61 பேர் மீது ஜாம் பஜார் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை:


வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் காணப்படும் பங்குச் சந்தை; புதிய உச்சத்தை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைத் கடந்து வர்த்தகம்


இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி:


பெங்களூரு விமான நிலையத்தில் நெறிமுறைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை; வெளிநாடு பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.


கெஜ்ரிவாலை விமர்சிக்கும் பாஜக, காங்கிரஸ்


டெல்லி முதலமைச்சர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்யப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருப்பது, ஒரு விளம்பரத் தந்திரம் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கிண்டல் செய்துள்ளன. ஆனால், கெஜ்ரிவாலின் முடிவை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பரூக் அப்துல்லா வரவேற்றுள்ளார். ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால், தலைமைச் செயலகத்திற்குச் செல்லக் கூடாது; எந்த கோப்பிலும் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்ததால், அவர் விரக்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு!


அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை உளவுப்படை கைது செய்துள்ளது. டிரம்ப் காயமின்றி உயிர்தப்பியதாக பாதுகாப்புப்படை தகவல்


ஓய்வு குறித்து மனம் திறந்த இந்திய வீரர் அஷ்வின்


கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்காவிட்டாலும், சாதித்தது போதும் என்ற எண்ணம் தோன்றினால் விடைபெற்று விடுவேன். 619 டெஸ்ட் விக்கெட் என்ற அனில் கும்ளேவின் சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் இலக்கை நிர்ணயித்து கிரிக்கெட் மீதான என் காதலை நான் இழக்க விரும்பவில்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார்.


தடம் பதித்த விராட் கோலி


வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோலி அடித்த பந்த ஒன்று, ஓய்வறையின் தடுப்புச் சுவரை சேதப்படுத்தியது. கோலி சேப்பாக்கத்தில் தனது தடத்தை விட்டு செல்வதாக ரசிகர்கள் கருத்து