பாலிவுட் நடிகை நீனா குப்தா 1982 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சாத் சாத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு வெளியான படாய் ஹோ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தனது நடிப்பை தொடங்கி உள்ளார். 63 வயதான நீனா குப்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அனுபவம் குறித்து நீனா குப்தா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: ”ஒரு நடிகராக நீங்கள் எல்லா வகையான காட்சிகளிலும் நடிக்க வேண்டும், சில சமயங்களில் சேற்றில் அடியெடுத்து வைக்க வேண்டும், சில சமயங்களில் வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்பு, நான் திலீப் தவானுடன் ஒரு சீரியலில் நடித்தேன். இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்முதலில் லிப்லாக் முத்தக் காட்சி இடம் பெற்ற தொடர் அது. என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. திலீப் என்னுடைய நண்பர் அல்ல. என்னுடன் பழகியவர் அவ்வளவு தான். அவர் மிகவும் அழகானவர் ஆனால் முத்தக் காட்சியில் நடிப்பது தான் பிரச்சனை. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் அந்த காட்சிக்கு தயாராக இல்லை. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் அதைச் சமாளிக்க நான் என்னை சமாதனப்படுத்தி, தயார்படுத்திக் கொண்டேன் நான் ஒரு நடிகை என்பதை நினைவில் கொண்டு அந்த முத்தக் காட்சியில் நடிப்பதற்கான துணிச்சலை வரவைத்துக் கொண்டேன்.
சிலரால் கேமரா முன் நகைச்சுவை செய்ய முடியாது, சிலரால் கேமரா முன் அழ முடியாது. நான் முத்தமிடும் காட்சியில் நடிப்பதற்கு பதட்டமடைந்தேன். அது முடிந்தவுடன், டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன். எனக்குத் தெரியாத ஒருவரை முத்தமிடுவது மிகவும் கடினமாக இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க